3.23 கோடியானது 11.63 கோடியாக மாறியுள்ளது.! ஜல்ஜீவன் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் தகவல்.!

Apr 5, 2023 - 05:29
 0  1

நாடுமுழுவதும் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் 11.62 கோடிகுடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்  தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் வீடு தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் வண்ணம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் ஜல்ஜீவன் எனும் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், நாடுமுழுவதும் வீடு தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒரு நொடிக்கு ஒரு குடிநீர் இணைப்பு :

இந்த திட்டம் குறித்து மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் அண்மையில் முக்கிய புள்ளி விவரங்களை தெரிவித்தார். அதில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஒரு நொடிக்கு ஒரு வீட்டில் குடிநீர் குழாய் இணைப்பு வீதம்,  தினமும் மொத்தம் 86,894 குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 11 கோடி குடிநீர் இணைப்புகள் :

இந்த ஜல்ஜீவன் திட்டம் ஆரம்பிக்கும் போது,நாடுமுழுவதும்  மொத்தம் 3.23 கோடி வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு இருந்ததாகவும், தற்போது 11,62,66,119 குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார். நமது நாட்டில் மொத்தம் 19,43,34,294 குடும்பங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மீதம் 40 சதவீதம் :

2024ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்பு வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், 60 சதவீத குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 40 சதவீத வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow