பொய்யான வணிக பரிமாற்றங்கள்..! டொனால்ட் டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் பதிவு..!

பணப் பரிமாற்றத்துடன் தொடர்புடைய வணிகப் பதிவுகளை பொய்யாக்குவது தொடர்பான 34 வழக்குகளில் டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கும் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் ரகசிய உறவு இருந்ததாக தகவல் வெளியாகி பெரிய சர்ச்சையானது. இந்த ரகசிய தொடர்பை மறைப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்ட்ராமி டேனியல்ஸுக்கு கட்சியின் நிதியில் இருந்து ($130,000)  இந்தியா மதிப்பின் படி ரூ.1,06,84,375 கோடி பணம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

மேலும், அமெரிக்கா சட்டப்படி இவ்வாறு பொய்யாக வணிக பரிமாற்றங்கள் செய்வது மிகப்பெரிய குற்றமாகும். இதன் காரணமாக, டிரம்பிற்கு எதிராக தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதனையடுத்து, நேற்று டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் சட்டப்படி கைது செய்தனர்.

மேலும், டிரம்ப் மீது பணப் பரிமாற்றத்துடன் தொடர்புடைய வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதற்காக 34 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒரு வழக்கில், டிரம்பிற்கு திருமணமாகாத குழந்தை இருப்பதை அறிந்ததாகக் கூறிய ஒருவர் அவரிடம் $30,000 (ரூ.24,40,363 லட்சம்) பெற்றார். மற்றொன்றில், டிரம்புடன் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய பெண் ஒருவர் $150,000 (ரூ.1.2 கோடி)பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்துள்ளார்.

இந்நிலையில், ஆபாச பட நடிகை ஸ்ட்ராமி டேனியல்ஸுடனான தொடர்பை மறைப்பதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அதிரடியாக கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment