எந்த ஒரு மாற்றம் இல்லாமல் உச்சத்தில் இருக்கும் தக்காளி விலை!

Jul 28, 2023 - 05:54
 0  0
எந்த ஒரு மாற்றம் இல்லாமல் உச்சத்தில் இருக்கும் தக்காளி விலை!

இன்று தக்காளி விலையில் எந்தவித மாற்றம் இன்றி கிலோ ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி முதல் ரகம் ரூ.140க்கும், இரண்டாம் ரகம் ரூ.130க்கும், மூன்றாவது ரகம் ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்கப்படுகிறது. மேலும், சின்ன வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெரும்பாலான மக்கள் மார்க்கெட் செல்ல முடியாததால் சில்லறை கடைகளில் அதிக விலை கொடுத்து தாக்காளி வாங்குகின்றனர். இதனால், ரேஷன் கடைகளில் அதிகளவில் தாக்காளியை விற்பனை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow