மக்களே இது தான் சரியான நேரம் உடனே சொல்லுங்கள்!! தொடர்ந்து சரியும் தங்கம் விலை...

Oct 3, 2023 - 05:38
 0  0
மக்களே இது தான் சரியான நேரம் உடனே சொல்லுங்கள்!! தொடர்ந்து சரியும் தங்கம் விலை...

பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும் உருகவனிப்பதுண்டு.

இத்தகைய தங்கம் விலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டுவந்த நிலையில், தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த 13 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080  குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

(03.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.66 குறைந்து, ரூ.5,290-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை ரூ.2 குறைந்து கிராமுக்கு ரூ.73.50க்கும், கிலோ ரூ.73,500க்கும் விற்கப்படுகிறது.

(02.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.42,848-க்கு விற்பனை ஆனது. அதுபோல ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.5,356-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து கிராம் ரூ. 75.50க்கும், கிலோ ரூ. 75,500க்கும் விற்பனை செயற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow