தமிழ்நாடு அரசு உடனடியாக இவர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் - ஓபிஎஸ்

Jun 30, 2023 - 05:01
 0  2
தமிழ்நாடு அரசு உடனடியாக இவர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் - ஓபிஎஸ்

கல்குவாரி உரிமையாளர்கள், கல் உடைக்கும் உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தத்தால் பல துறைகள் முடங்கும் ஆபத்து உள்ளது என ஓபிஎஸ் அறிக்கை. 

கல்குவாரி உரிமையாளர்கள், கல் உடைக்கும் உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தத்தால் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும், கட்டுமானத்துறை உள்ளிட்ட பல துறைகள் முடங்கும் ஆபத்தும் உள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக இவர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,'தொழில்மயமான மாநிலங்களின் வரிசையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டுமென்றால், அதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. இந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டால்தான், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்வதற்கான உகந்த சூழ்நிலை ஏற்படும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை நிலவுகிறது.

பிற மாவட்டங்களிலிருந்து சென்னையை நோக்கி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 2,000 லாரிகளில் கற்கள் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது இதில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். கல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் 'வேலை நிறுத்தம் தொடர்ந்தால், கட்டடத் தொழில் மிகப் பெரிய பாதிப்பினைச் சந்திக்கும் என்றும், இதன் காரணமாக கட்டுமானச் செலவு மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும், இதன் விளைவாக ஏழையெளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கட்டுமானத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய குழாய் பதிக்கும் பணிகள், மின்சார சாதனம் பொருத்தும் பணிகள் என பல பணிகள் பாதிக்கப்படக்கூடும். இந்த வேலைநிறுத்தம் கட்டுமானத் துறையில் தாக்கத்தை போன்றவற்றை கைத்தொழிலாக மேற்கொள்வதற்கான அதிகாரத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மீண்டும் வழங்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.' என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow