#BREAKING: சர்ச்சை பேச்சு – சீமான் மீது வழக்குப்பதிவு!

பரப்புரை கூட்டத்தில் சர்ச்சையாக பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை.

சீமான் மீது வழக்குப்பதிவு:

seeman11

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் அருந்ததியினர் சமுகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டியலின அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலீசார் நடவடிக்கை:

Seeman reports
Seeman reports that untouchability atrocities in the name of caste show the failure of Dravidian parties. [Image Source : L. Balachandar]

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி பரப்புரையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 13-ஆம் தேதி திருநகர் காலனியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியது சர்ச்சையானது. சீமான் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்திருந்த நிலையில், கருங்கல்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்:

இதனிடையே, தேர்தல் பரப்புரையில் அருந்ததியின் குறித்து கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தேர்தல் ஆணையம் கெடு:

sivakumar

நாம் தமிழர் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி, சீமானின் தேர்தல் பரப்புரைக்கு தடை விதிக்க கோரியும் சமூகநீதி மக்கள் கட்சி புகார் அளித்தனர். சீமான் பேச்சு தொடர்பாக வேட்பாளர் மேனகா 24 மணி நேரத்தில் விளக்கம் தர வேண்டும் என்றும் தவறினால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Comment