4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவித்த தமிழக அரசு..!

Dec 18, 2023 - 02:37
 0  0
4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவித்த தமிழக அரசு..!

கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி  ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கி மற்றும் பொது சேவை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய சேவைகள் மட்டும் குறைந்த பணியாளர்களை கொண்டு இயக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

கனமழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய  மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:

கனமழை காரணமாக  ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow