திருவண்ணாமலை, சேலம், தென்காசி, செங்கல்பட்டு மற்றும் வேலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியனும், சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவியும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ், தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர், வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொகுதி பங்கீடு: திமுக, காங்கிரஸ் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை…! […]
தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கு டி.ஐ.ஜியாக பதிவு உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பி.ஆர்.வெண்மதி, பி.அரவிந்தன், வி.விக்ரமன், சரோஜ்குமார் தாகூர் உள்ளிட்ட 10 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று, டி.மகேஷ்குமார், என்.தேவராணி, இ.எஸ்.உமா, ஆர்.திருநாவுக்கரசு, ஆர்.ஜெயந்தி, ஜி.ராமர் ஆகியோருக்கும் பதிவு உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஆனந்தகுமார் சோமானி, ஆர்.தமிழ்சந்திரன் ஆகிய இருவருக்கும் ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு அளித்துள்ளது தமிழக அரசு. மேலும், தமிழ்நாட்டில் 7 […]
கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கி மற்றும் பொது சேவை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய சேவைகள் மட்டும் குறைந்த பணியாளர்களை கொண்டு இயக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, […]
108 அதிகாரங்களில் உள்ள குறள்களை பாடத்தில் சேர்த்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் 6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களையும் சேர்க்கவேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 108 அதிகாரங்களில் உள்ள 1050 குறள்களையும் கற்பிக்க ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு செயல்படுத்தவில்லை என மனுதாரர் ராம்குமார் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் தற்போது […]
குடும்ப அட்டை மற்றும் நலவாரிய அட்டை இல்லாத 3 ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்குவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த,கிரேஸ் பானு என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ,ரேஷன் அட்டை மற்றும் நலவாரிய அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும்,கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்க,அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து,இந்த வழக்கானது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, […]
நாளை முதல் ரேசன் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் ரேசன் கடைகளானது,காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும்,மேலும்,பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும்,இதுகுறித்து தமிழக அரசு,அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் […]
தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், ஒருவருக்கு பணியிட மாற்றமும் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், ஒருவருக்கு பணியிட மாற்றமும் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏ.டி.ஜி.பியாக இருந்த சுனில் குமாருக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி.யாக பதவி உயர்வு, பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பியாக இருந்த சுனில்குமார் சிங், சென்னை சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஐ.ஜி பொறுப்பில் மதுரை காவல் துறை ஆணையராக உள்ள […]