Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ம் தேதி பொது விடுமுறை. நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதன்பின், ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பல்வேறு மாநிலங்களில் 6 கட்டங்களாக வாக்குப் பதிவு […]
உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு நாளை ஜன. 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக ராமர் பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உத்தரப்பிரதேசம், குஜராத், புதுச்சேரி என 16 க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களுக்கும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்கும் வகையில், நாளை […]
உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு வரும் ஜன. 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக ராமர் பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட மிக முக்கிய நபர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் […]
கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கி மற்றும் பொது சேவை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய சேவைகள் மட்டும் குறைந்த பணியாளர்களை கொண்டு இயக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, […]
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை நீடிக்கும் நிலையில், பொது விடுமுறையை அறிவித்தது தமிழ்நாடு அரசு. பொது விடுமுறையால் 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருது பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர், பால், மருத்துவ சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவை […]
கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றதை அடுத்த இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்தின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸை 4-2 என்று டை-பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வெற்றிகொண்டாட்டமானது அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கொண்டாடப்படுகிறது.இதில் மெஸ்ஸி தலைமையிலான சாம்பியன் அர்ஜென்டினா கால்பந்து அணி கலந்து கொள்ள உள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக கூடுதல் நேரம் நியாயவிலை கடைகள் செயல்படும் என்பதால், நவம்பர் 6ம் தேதி பொது விடுமுறை அறிவித்து உத்தரவு. பொது விநியோகத் திட்ட நியாயவிலை கடைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று தினங்களில் கூடுதல் பணி நேரம் செயல்படுவதால் நவம்பர் 6-ஆம் தேதி பொது விநியோக திட்ட நியாயவிலை கடைகளுக்கு பொது விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. மேலும், […]
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு […]