“முதல்வரே…இதனை பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையினை எதிர்த்து திமுக அரசு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,இது மட்டுமல்லாமல் இதனை பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மத்திய … Read more

“மதச்சார்பற்ற நெறிமுறைகளை நிலைநிறுத்துவதை உறுதி செய்வோம்” – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை:அரசியலமைப்பின் மதச்சார்பற்ற நெறிமுறைகளை நிலைநிறுத்துவதை இந்த குடியரசு தினத்தில் மீண்டும் உறுதி செய்வோம் என மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்றது.விழா தொடக்கத்தில்,ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து,பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள் உள்ளிட்ட பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். … Read more

மொழிப்போர் தியாகிகள் தினம்:முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

சென்னை:மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று,சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழினத்தின் மாபெரும் போரில்,தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்து,வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில்,ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில்,மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்க நாளான இன்று, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் … Read more

“எனது தலைமையிலான அரசுக்கு இருந்த அக்கறையும்,கரிசனமும் இந்த விடியா திமுக அரசுக்கு இல்லை” – ஈபிஎஸ் வேதனை!

புதிதாக துவங்க உள்ள என்எல்சி(NLC) நிறுவனத்தின் மூன்றாம் சுரங்கத்திற்கான இழப்பீட்டு நிவாரணத்தை நியாயமாக வழங்கக் கோரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வேண்டும் என என்.எல். சி.நிறுவனம் மற்றும் தமிழக அரசுக்கு என்று ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக துவங்க உள்ள என்எல்சி(NLC) நிறுவனத்தின் மூன்றாம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு,ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும்,வீட்டு மனைகளுக்கு,ஊரகப் பகுதிகளில் சென்ட்டுக்கு 40,000 ரூபாயும்,நகரப் பகுதிகளில் 75,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும்,மேலும்,மறு குடியமர்வுக்காக … Read more

#Breaking:”நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது.சட்டமன்றத்தில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காததால் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. குடியரசு தலைவருக்கு நீட் விலக்கு மசோதா அனுப்பாததால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து … Read more

“அம்மா மினி கிளினிக்….திமுக அரசின் குறி” – டிடிவி தினகரன் கண்டனம்!

புரட்சித்தலைவி அம்மா பெயரிலான திட்டங்களை எல்லாம் மூடுவதிலேயே திமுக அரசு குறியாக இருப்பது தவறானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெரியார் திடலில் கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிறப்பு மையத்தை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட 2,000 அம்மா மின் கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டது. போதிய செவிலியர்கள் இல்லாத காரணத்தினால் செயல்படாமல் இருந்தது. இத்திட்டம் என்பது தற்காலிகமானது,ஓராண்டு … Read more

“மிகுந்த வேதனை…விடியா அரசே,இதனை தடை செய்” – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

திமுக அரசு,ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை பெருங்குடியில் வசிக்கும் வங்கி ஊழியரான மணிகண்டன் என்பவருக்கு,தாரா என்ற மனைவியும்,இரண்டு மகன்களும் இருந்தனர். இந்த நிலையில்,தனது மனைவி மற்றும் மகன்களை கொலை செய்து விட்டு மணிகண்டன் தானும் தற்கொலை செய்துள்ளார். இந்த தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட … Read more

அதிமுக செய்தால் அது “ரத்தம்” திமுக மேற்கொண்டால் “தக்காளி சட்னியா”? – ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

விவசாய இணைப்புகளில் தமிழக அரசு மேற்கொள்ளும் மின்மீட்டர் பொருத்தும் பணி விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும்,அதிமுக செய்தால் அது “ரத்தம்” திமுக மேற்கொண்டால் “தக்காளி சட்னியா”? என்றும் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் உள்ள விவசாய இணைப்புகளில் மின்மீட்டர் பொருத்தும் பணியை உடனடியாக நிறுத்திவிட்டு,மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்வதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் முதன் முதலாக … Read more

“திமுக….தீய சக்தி கூட்டம்” – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்களின் காவல்துறை,உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? என்றும்,திமுகவை ‘தீய சக்தி கூட்டம்’ என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்? என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கட்சி சார்பில் கோவை மாவட்ட மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று … Read more

“இவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி” – ஈபிஎஸ் பரபரப்பு அறிக்கை!

தி.மு.க.தேர்தலின் போதும்,பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபோதும்,வாய் புளித்ததோ,மாங்காய் புளித்ததோ என்று உண்மையான சூழலை மாணவர்களிடம் தெரிவிக்காமல்,நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மீண்டும் மீண்டும் நுழைவுத் தேர்வினை அரசியலாக்கியதே மாணவச் செல்வங்களின் மன உளைச்சலுக்கு காரணம் என்று ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் வரை,நீட் நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியினை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும்,இந்த  விடியா அரசின் வாக்குறுதிகளை நம்பி உயிரிழந்த மாணவச் செல்வங்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் … Read more