இடிந்து விழுந்த நிலக்கரி சுரங்கம் – பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலக்கரி சுரங்கம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள தகவலில், இந்த நிலக்கரி சுரங்கம் கடந்த இரண்டு மாதங்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், இதன் அடியில் தற்பொழுது சட்டவிரோதமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிலக்கரி சுரங்கம் இன்று காலை எட்டரை மணியளவில் இடிந்து விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் காயமடைந்தோர் அல்லது உயிரிழந்தோர் குறித்த எந்த தகவலும் … Read more

“எனது தலைமையிலான அரசுக்கு இருந்த அக்கறையும்,கரிசனமும் இந்த விடியா திமுக அரசுக்கு இல்லை” – ஈபிஎஸ் வேதனை!

புதிதாக துவங்க உள்ள என்எல்சி(NLC) நிறுவனத்தின் மூன்றாம் சுரங்கத்திற்கான இழப்பீட்டு நிவாரணத்தை நியாயமாக வழங்கக் கோரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வேண்டும் என என்.எல். சி.நிறுவனம் மற்றும் தமிழக அரசுக்கு என்று ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக துவங்க உள்ள என்எல்சி(NLC) நிறுவனத்தின் மூன்றாம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு,ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும்,வீட்டு மனைகளுக்கு,ஊரகப் பகுதிகளில் சென்ட்டுக்கு 40,000 ரூபாயும்,நகரப் பகுதிகளில் 75,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும்,மேலும்,மறு குடியமர்வுக்காக … Read more

அங்கோலா நாட்டு தங்க சுரங்க விபத்து – 11 பேர் உயிரிழப்பு!

அங்கோலா நாட்டு தங்க சுரங்க விபத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 11 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கோலா நாட்டில் உள்ள ஹம்போ எனும் மாகாணத்தில் தங்க சுரங்கங்களில் சட்டவிரோதமாக பலர் பணியாற்றி வருவதாகவும், இந்த பகுதிகளில் பல முறை விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளனர். அப்போது பேசிய ஹம்போ மாகாணத்தின் தேசிய காவல்துறை ஆணையர் பிரான்சிஸ் அவர்கள், அங்கோலா நாட்டில் பைலுண்டோ, உகுமா, சின்சென்ஜ், லாங்கோன்ஜோ, காலா, ஷிகாலா, சோலோஹங்கா மற்றும் ஹம்போ … Read more