“இது திமுகவினர் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

சென்னை:நாம் தமிழர் கட்சி சார்பில் அண்மையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்,குறுக்கிட்ட திமுகவினரின் செயல் குறித்து,கருத்து சுதந்திரத்தை பலி கொடுப்பது திமுகவினரின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி தருமபுரி மாவட்டம்,மொரப்பூர் பேருந்து நிலையம் அருகே … Read more

“விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப,அடியோடு அழிக்க,சபதம் ஏற்கிறோம்” – அதிமுகவினர் உறுதிமொழி!

சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,புரட்சி தலைவருமான டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் .மேலும்,”விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப,அடியோடு அழிக்க, சபதம் ஏற்கிறோம்” என்று கட்சி ஒருங்கிணப்பாளர்கள் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி. கடந்த 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கி,1977-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் … Read more

“ஏழு மாத கால தி.மு.க. ஆட்சி…நேர்மாறான சூழ்நிலை” – ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

நுகர்வோருக்கு தரமான பொருட்கள் மற்றும் சேவைகள் நியாயமான விலையில் கிடைக்கப் பெறுவதையும்,விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப் பெறுவதையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும்,பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு என்றும்,கடந்த ஏழு மாத கால தி.மு.க. ஆட்சியில் இதற்கு நேர்மாறான சூழ்நிலை நிலவுகிறது என்பதைத் தான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றும் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதுள்ள விலைவாசி ஏற்றத்தினை கருத்தில் கொண்டு,காய்கறிச் சந்தையை முறைப்படுத்தும் நடவடிக்கையினை தமிழக முதல்வர் எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் … Read more

“தீவிரவாதியைத் தேடுவது போல்,முன்னாள் அமைச்சரை திமுக அரசு கையாள்கிறது” – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

தீவிரவாதியைத் தேடுவது போல முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக அரசு கையாள்கிறது என்றும்,இது திமுக அரசின் காழ்ப்புணர்ச்சி செயல் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி,ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.ரவீந்திரன், விஜய் நல்லதம்பி என்பவர்கள் அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதியப்பட்டது. … Read more

#Breaking:இனி நேரடி கண்காணிப்பு – ‘CM dashboard’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

சென்னை:அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகை (CM dashboard) திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அனைத்துத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,அனைத்து துறை சார்ந்த திட்டங்கள்,செயல்பாடுகள் குறித்து நாள்தோறும் தானே நேரடியாக கண்காணிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி,முதலமைச்சர் அறையில் மின்ணணு பலகை மூலம் அரசின் திட்டங்களின் நிலையை கண்காணிக்கும் திட்டம் இன்று தொடங்கப்படும் என்றும்,மின்னணு தகவல் … Read more

“பிரச்சனைகளை வருமுன் தடுத்திட வேண்டும்” – முதல்வருக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்!

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலும்,தங்கும் விடுதிகளிலும் சுகாதாரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல்துறை நடவடிக்கை ஏதுமின்றி விரைவில் திமுக அரசு விடுவிக்க வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வெளியான செய்தியை அடுத்து,உயிரிழந்ததாகக் … Read more

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கடந்த டிச.1 ஆம் தேதி அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் திமுக அரசைக் கண்டித்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன்படி, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து, ஆட்சிப் பொறுப்புக்கு … Read more

“அரசின் கொடுமையால் மக்கள் வடிக்கும் கண்ணீர்,ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும்” – ஓபிஎஸ் எச்சரிக்கை!

கடந்த ஏழு மாத தி.மு.க. ஆட்சியில், அனைத்துப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தற்போது நிலவும் தாங்க முடியாத விலைவாசி உயர்வைக் கண்டு மக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும், விரக்தியில் உள்ள மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும், இல்லையெனில், வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, அரசனின் கொடுமை … Read more

“விடியா அரசே… அம்மாவின் ஆட்சியில் கருவூலகத்திற்கு முழுமையாக சென்ற இந்த வருவாய்;தற்போதும் செல்ல வேண்டும்”-ஈபிஎஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் உள்ள கல் குவாரிகளில் பர்மிட் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை திமுக அரசு களைந்திட வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அம்மாவின் அரசில்,எப்படி கல் குவாரிகளின் வருவாய் முழுமையாக அரசின் கருவூலத்திற்கு சென்றடைந்ததோ,அதன்படி தற்போதும் கல் குவாரிகள் மூலம் வரவேண்டிய வருவாய் முழுவதும் அரசின் கருவூலத்தைச் சென்றடைவதை, இந்த விடியா அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும்,கல் குவாரிகளில் பர்மிட் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை களைந்திட வேண்டும் என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி … Read more

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன்- நாளை தருகிறார் முதல்வர் ஸ்டாலின்!

திருவள்ளூர்:மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். தமிழகத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை,திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாளை நடைபெறும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும்,பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார். தமிழகத்தில் சுமார் ஒரு கோடி மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஏற்கனவே ரூ.10,000 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது … Read more