“முடிந்தால் தூக்குங்கள்” – திமுக எம்பிக்கு சவால் விடுத்த எம்எல்ஏ வானதி சீனிவாசன்!

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் பாஜகவில் இணைந்தார். அண்ணாமலை முன்னிலையில்: கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மனு அளித்தபோதும் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு திமுக வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், தனக்கு கட்சி பதவியாவது கொடுக்க வேண்டும் என கோரியதாகவும்,இதனை திமுக தலைமை கண்டு கொள்ளாத நிலையில் பாஜகவுக்கு செல்ல முயற்சி எடுத்துள்ளார். … Read more

குட்நியூஸ்…இவர்களுக்கும் மகப்பேறு விடுப்பு – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை கடந்த 2011 ஆம் ஆண்டில் 6 மாதங்களாக உயர்த்துவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்பின் 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்று 2016 ஆம் ஆண்டில்  சட்டப்பேரவை விதி 110 கீழ் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். இதனையடுத்து,தேர்தல் அறிக்கையில் கூறியவாறு கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் மகப்பேறு விடுப்புக்கான கால அளவவானது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1 … Read more

“பொய் விளம்பரம்;சட்டம் ஒழுங்கு கெட்ட திமுக ஆட்சி” – ஈபிஎஸ் ஆவேசம்!

திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு,தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், துளி போன்ற இந்த ஓராண்டு காலத்தில் கடல் போன்ற சாதனைகளை செய்துள்ளோம் என்ற பெருமிதத்துடன் தான் மாமன்றத்தில் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர், 5 முக்கிய திட்டங்களை அறிவித்தார்.அதன்படி, அரசு பள்ளியில் (1 முதல் 5) மாணவர்களுக்கு காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது,படிப்படியாக … Read more

திமுகவின் ஓராண்டு கால ஆட்சி;துயரமான ஆட்சி – ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.அந்த வகையில்,மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. உழைப்பு தொடரும்: இதனை முன்னிட்டு “இந்தியாவின் நம்பர் 1 முதல்வராக இருக்க விரும்புவதை விட,இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்பதே உண்மையான பெருமை தரக்கூடியது,எனவே அதற்கான எனது உழைப்பு தொடரும், இடர்பாடுகளை நீக்கி … Read more

“ஏழு மாத கால தி.மு.க. ஆட்சி…நேர்மாறான சூழ்நிலை” – ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

நுகர்வோருக்கு தரமான பொருட்கள் மற்றும் சேவைகள் நியாயமான விலையில் கிடைக்கப் பெறுவதையும்,விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப் பெறுவதையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும்,பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு என்றும்,கடந்த ஏழு மாத கால தி.மு.க. ஆட்சியில் இதற்கு நேர்மாறான சூழ்நிலை நிலவுகிறது என்பதைத் தான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றும் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதுள்ள விலைவாசி ஏற்றத்தினை கருத்தில் கொண்டு,காய்கறிச் சந்தையை முறைப்படுத்தும் நடவடிக்கையினை தமிழக முதல்வர் எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் … Read more

“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு”-முதல்வருக்கு பாமக எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு!

சேலம்:’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்ற அண்ணாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்து தொகுதி மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செய்து வருவதாக சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேற்று சேலம் மாவட்டம் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று,ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து,30,837 பயனாளிகளுக்கு 168 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை … Read more

“இதையே சரிவர நிர்வகிக்காதவர்,முதன்மை முதல்வரென தம்பட்டம் அடித்துக்கொள்வதா?” – சீமான் குற்றச்சாட்டு!

தமிழகம்:திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஆணவப்படுகொலைகள்,பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் என நாளும் வெளிவரும் கொடுஞ்செய்திகளும், குற்ற நிகழ்வுகளும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் நிலையைக் கேள்விக்குள்ளாக்குவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். தன்வசமிருக்கும் காவல்துறை அமைச்சகத்தையே சரிவர நிர்வகிக்காத முதல்வர் ஸ்டாலின், தலைசிறந்த ஆட்சியைத் தருவதாகக் கூறி, முதன்மை முதல்வரென தம்பட்டம் அடித்துக்கொள்வதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சி – … Read more

“அதிர்ஷ்ட வசத்தால் ஆட்சிக்கு வந்த தி.மு.க;2,000 கோடி ரூபாய் வரை நிலுவைத் தொகை கை நழுவுகிறதா?” – எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி..!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு வரவேண்டிய மத்திய அரசு நிதி திமுக அரசின் நிர்வாகத் திறமை இன்மையால் கை நழுவுகிறதா? என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சந்தர்ப்பவாத தி.மு.க. ஆட்சி: “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்ற முதுமொழியை நிதர்சனப்படுத்தும் பணியை பல ஆண்டுகளாகச் செய்துவந்த தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தற்போதைய சந்தர்ப்பவாத தி.மு.க. ஆட்சியில் செயலிழந்துபோய் நிற்பது வேதனைக்குரியதாக … Read more