தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை முத்திரை சின்னம் வெளியீடு..!

TNBudget2024

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு “2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வருகின்ற 19-ஆம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் இதை தொடர்ந்து 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் எனவும் பட்ஜெட் கூட்டம் வருகின்ற 22ஆம் தேதி வரை நடைபெறும்” என அறிவித்தார். 1 ட்ரில்லியன் பொருளாதாரம்.. வெள்ளை அறிக்கை வேண்டும்.! … Read more

1 ட்ரில்லியன் பொருளாதாரம்.. வெள்ளை அறிக்கை வேண்டும்.! இபிஎஸ் சரமாரி குற்றசாட்டு.! 

Edappadi Palanisamy - Tamilnadu CM MK Stalin

இன்று தமிழக சட்டப்பேரவையில், பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வு நிறைவு பெற்ற பின்னர் தலைமை செயலக வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், அதிமுக ஆட்சி காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பல்வேறு உத்தரவுகள் தற்போது ஏற்கப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக 11.12.2017இல் அதிமுக ஆட்சியில் 12 ஆரம்ப சுகாதர நிலையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. … Read more

33 மாதங்கள்.. திராவிட அரசின் திட்டங்கள்… நீண்ட பட்டியலை கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Tamilnadu CM MK Stalin speech in TN Assembly

கடந்த திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்திற்காக தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஆரம்பித்தன. அதில் தமிழக அரசு அளித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி அதனை புறக்கணித்து, சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை வாசித்தார். மேலும் ஆளுநர் பேசியது சட்டப்பேரவை குறிப்பில் இடம்பெறாது என்றும், அரசு கொடுத்த உரைதான் சட்டப்பேரவை நிகழ்வில் பதியப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதனை அடுத்து, நேற்று முன்தினம் … Read more

Today TNAssembly Live : இன்றைய தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள்….

Today TN Assembly Live

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 3வது நாளாக இன்று கூடியுள்ளது. இன்று ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இன்று நடைபெற உள்ளது. அதே போல அதிமுக தரப்பின் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் இன்று நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  இன்னும் பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலையில் காணலாம்….

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை.. நடவடிக்கை எடுக்க முதல்வர் கோரிக்கை.! 

TNAssembly 2024 - MK Stalin - Edappadi Palanisamy

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உயர் மற்றும் உச்சநீதிமன்றங்களை நாடினாலும் இதுவரை எந்த பலனும் இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா – ஆளுநர் ரவி ஒப்புதல் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணை எதிர்க்கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் … Read more

Today TNAssembly Live ; ஆளுநர் உரையும்… அதன் மீதான விவாதமும்..

Today TNAssembly Live

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்றைய கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி , தமிழக அரசு கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்காமல் அதனை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் நாளே பரபரப்பானது. இன்று இரண்டாம் நாள் மற்றும் நாளை மூன்றாம் நாளில் ஆளுநர் உரையின் கீழ் விவாதம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதி பதிலுரை நிகழ உள்ளது.அதற்கடுத்து தமிழக பொது … Read more

இதுதான் நான் பேசியது… ஆளுநர் R.N.ரவி வெளியிட்ட புதிய வீடியோ…

Tamilnadu Governor RN Ravi

இந்த வருடன் முதல் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையின் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன் பிறகு பட்ஜெட் கூட்டத்தினரின் அறிமுகத்தை வாசித்தார். அதன் பின் பாதியில் அதனை நிறைவு செய்து, இங்கு (சட்டப்பேரவையில்) தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறி இரண்டு நிமிடத்தில் உரை நிறைவு செய்து அவையை விட்டு வெளியேறினார் ஆளுநர் ரவி . இது குறித்து சபாநாயகர் அப்பாவு சட்டமன்றத்தில் கூறுகையில், தேசிய கீதத்தை … Read more

தமிழக சட்டப்பேரவை பிப்.12ம் தேதி தொடங்கும்- சபாநாயகர் அறிவிப்பு!

TNAssembly

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “வருகின்ற பிப்ரவரி 12-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது என தெரிவித்தார்.  இதைத் தொடர்ந்து பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் எனவும் தெரிவித்தார். பின்னர் 20 ஆம் தேதி 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முன்பணம்  மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதேபோல  21 ஆம் தேதி 2023- 24 … Read more

ஆளுநர் ரவி – முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.! 20 மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு.!

TN Governor RN Ravi - Tamilnadu CM MK Stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றும் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற வேண்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்படும். ஆனால், ஆளுநர் ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்காமல், அந்த மசோதாக்களை கிடப்பில் போட்டும், பல்வேறு மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியும் வந்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல், நிலுவையில் வைத்துள்ளார். அதனால், மசோதாக்களுக்கு … Read more

#Breaking : ஜனவரி 9ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை.! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.!

2023, ஜனவரி 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையுடன் அலுவல் பணிகள் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவை அலுவல் பணிகள் 2023 தொடக்கத்தில் ஜனவரி 9ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார். அதன் பிறகு, அலுவல் பணிகள் தொடங்க உள்ளது . அதன் பிறகு, சட்டப்பேரவை எத்தனை நாள் சட்டப்பேரவை இருக்கும். கேள்வி நேரம், மசோதா உள்ளிட்ட விவரங்கள் முடிவு செய்யப்படும் என தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு … Read more