#Breaking:ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அசத்தல் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.அதன்படி,சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில்,சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்: “நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் மறுவாழ்வுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டம் குறித்து அறிவித்ததன்படி, சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை … Read more

சற்று முன்னர்…கருணாநிதி படத்திறப்பு விழா சிறப்பு மலர் -வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்றது.கருணாநிதியின்  உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்நிலையில்,மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை சட்டமன்றத்தில்  தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சற்று முன்னர் வெளியிட்டார். இதனை, சபாநாயகர் அப்பாவு பெற்றுக்கொண்டார். இந்த … Read more

#Justnow:கருணாநிதி படத்திறப்பு விழா சிறப்பு மலர் – இன்று வெளியிடும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்றது.கருணாநிதியின்  உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்நிலையில்,மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிடுகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழா,கருணாநிதி படத்திறப்பு … Read more

#Justnow:தொழில் முனைவோருக்கு அரசு மானியம் – அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்று வருகிறது.அதன்படி,இது குறித்து பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.இதனிடையே,பல்வேறு புதிய அறிவுப்புகளையும் அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்,நறுமணப் பூக்களைப் பயன்படுத்தி வாசனை திரவிய தொழிற்சாலையை தொடங்க முன்வரும் தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் … Read more

#Justnow:சட்டப்பேரவையில் இன்று…முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள துறை மீதான விவாதம்!

சட்டப்பேரவையில் இன்று காவல்துறை,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுகிறது. அதன்படி,இது குறித்து பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப உள்ளனர்.குறிப்பாக,தமிழகத்தில் தற்போது உள்ள சட்டம் ஒழுங்கு நிலை,காவல்நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் மரணம் தொடர்பான பிரச்சனைகளை முன்வைக்க அதிமுக,பாஜக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்து,சட்டப்பேரவை விதி எண் 110 இன் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. முதலைமைச்சரின் … Read more

“பொய் விளம்பரம்;சட்டம் ஒழுங்கு கெட்ட திமுக ஆட்சி” – ஈபிஎஸ் ஆவேசம்!

திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு,தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், துளி போன்ற இந்த ஓராண்டு காலத்தில் கடல் போன்ற சாதனைகளை செய்துள்ளோம் என்ற பெருமிதத்துடன் தான் மாமன்றத்தில் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர், 5 முக்கிய திட்டங்களை அறிவித்தார்.அதன்படி, அரசு பள்ளியில் (1 முதல் 5) மாணவர்களுக்கு காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது,படிப்படியாக … Read more

#Breaking:விசாரணைக் கைதி கொலை வழக்கு- 2 காவலர்கள் கைது!

கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னை தலைமை செயலக காலனி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,கஞ்சா மற்றும் கத்தியுடன் விக்னேஷ்,சுரேஷ் என்பவர் பிடிபட்ட நிலையில்,அதன்பின்னர்,போலீஸ் விசாரணையில் விக்னேஷ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இந்த வேளையில்,தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து … Read more

#Breaking:அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்…அகவிலைப்படி உயர்வு மசோதா இன்று தாக்கல்?..!

தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுத்துறை,கவர்னர்,சிறப்பு முயற்சிகள் துறை,அமைச்சரவை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது. ஆனால்,கேள்வி நேரம் இல்லாமல் இன்று பேரவையை நடத்த வேண்டும் என அவை முன்னவர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன் சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த நிலையில்,இன்று கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம என தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,அரசு … Read more

மதுரையின் சிறந்த பொழுபோக்கு அண்ணன் ‘செல்லூர் ராஜூ’ – அமைச்சர் தங்கம் தென்னரசு நகைச்சுவை!

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.அந்த வகையில்,மதுரை மாவட்டத்தின் மெரினாவாக இருக்கும் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் லேசர் ஷோ நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கூறினார்.இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள்,தங்களது கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று … Read more

சற்று நேரத்தில்!பேரவையில் இன்று…அறிமுகமாகும் அம்பேத்கர் சட்ட பல்.கழக திருத்த மசோதா!

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில், போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.அதன்படி,வினாக்களின் நேரத்தின்போது எதிர்க்கட்சி சட்டமன்றஉறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் ஆகியோர் பதில் அளித்து புதிய அறிவுப்புகளை அறிவிப்பார்கள். மேலும்,சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை வாங்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில்,அதற்கான அறிவுப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம்,உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுற்றுலாக் கொள்கைகளை … Read more