சற்று முன்னர்…கருணாநிதி படத்திறப்பு விழா சிறப்பு மலர் -வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்றது.கருணாநிதியின்  உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

இந்நிலையில்,மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை சட்டமன்றத்தில்  தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சற்று முன்னர் வெளியிட்டார். இதனை, சபாநாயகர் அப்பாவு பெற்றுக்கொண்டார்.

இந்த சிறப்பு மலரில் கடந்த 1922 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை தமிழக சட்டமன்றத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்த சிறப்பு படங்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.மேலும்,கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழா குறித்த நிகழ்வுகளின் படங்களும் இடம் பெற்றுள்ளன.இந்த சிறப்பு மலர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,இந்த நிகச்சியில் திமுக உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.ஆனால்,அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இதனை புறக்கணித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,காலை 10 மணிக்கு நடைபெறும் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்.மேலும்,இன்றுடன் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நிறைவு பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.