டி.டி.வி.தினகரன் வீட்டு நாயாக இருந்தோம்… அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு.!

TTV Dhinakaran - RB Udhayakumar

T.T.V.Dhinakaran : முன்பு உங்கள் வீட்டு காவல் நாயாக இருந்தோம் என டிடிவி.தினகரனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி. மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் டிடிவி.தினகரன் ஆகியோர் களமிறங்குகின்றனர். டி.டி.வி.தினகரன், தங்கத்தமிழ்செல்வன் ஆகிய இருவருமே அதிமுக கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் என்பதால் இந்த தேர்தல் களம் மிக சுவாரஸ்யமாகவும், பிரச்சார களம் மிக தீவிரமாகவும் இருக்கிறது. முன்னதாக தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி.தினகரன் பிரச்சாரம் … Read more

கேட்டது கிடைத்தது… தேனியில் போட்டியா? டிடிவி தினகரன் அடுத்த அப்டேட்!

ttv dhinakaran

TTV Dhinakaran: பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.  நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் வாக்குறுதி என தேர்தலுக்கு முந்தைய பணிகளை முடித்த திமுக பிரச்சாரத்துக்கு தயாராகி வருகிறது. Read More – திமுக வேட்பாளர் வெளியீடு! எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி? 11 … Read more

பாஜக தலைமையில் ‘மெகா’ கூட்டணி.! அமமுக, ஓபிஎஸ் அணிக்கு ஒற்றை இலக்க தொகுதிகள்.?

TTV Dhinakaran - O Panneerselvam

AMMK-OPS : மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் கூட்டணி விவகாரங்களை விரைந்து முடிக்க ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் திமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தையை முழுதாக நிறைவு செய்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் களம் இறங்கியுள்ளது. தமிழகத்தின் அடுத்து அனைவரும் எதிர்பார்ப்பது, அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தனித்தனி கூட்டணிகள். இதில் பிரதான கட்சிகள் எந்தெந்த கூட்டணிக்கு செல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பல்வேறு அரசியல் திருப்பங்கள் … Read more

பாஜக கூட்டணியில் இணைந்தது அமமுக… டிடிவி தினகரன் அறிவிப்பு!

TTV Dhinakaran

TTV Dhinakaran : மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது. Read More – ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் இதனால் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைத்து போட்டியிடும். … Read more

அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற முடியாது… டிடிவி தினகரன் பேட்டி

ttv dhinakaran

பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் அல்லது தனித்து போட்டியிடும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அமமுக கட்சி தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. முதலில் ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றோம். இதன்பின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை சொல்ல முடியாத காரணத்தால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை. இதனால் வரும் மக்களவை தேர்தலுக்காக கூட்டணி அமைப்பது குறித்து சில … Read more

பொன்னாடை, பூங்கொத்து வேண்டாம்.. நிதியுதவி வேண்டும்.! டிடிவி கோரிக்கை.!

AMMK Leader TTV Dhinakaran

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) கட்சியின் தலைவருமான டிடிவி.தினகரன் தனது கட்சி நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு ஓர் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில், தனது கட்சி வளர்ச்சிக்காக நிதி கொடுத்து உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து டி.டி.வி.தினகரன் வெளியிட்ட செய்தி குறிப்பில், நீங்கள் (ஆதரவாளர்கள்) என் மீது கொண்டுள்ள அன்பும், நான் உங்கள் மீது கொண்டுள்ள அன்பும் அவ்வளவு அற்புதமானது. எனக்கு எப்போதும் எல்லாமும் ஆகிய கழக உடன்பிறப்புகளுக்கு அன்புகலந்த கண்டிப்பான … Read more

பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் – டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என டிடிவி தினகரன் பேட்டி.  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக செயல்படாத கட்சியாக உள்ளது. எடப்பாடி உடன் அமமுக கூட்டணி என எங்கும் சொன்னதில்லை. 0.25% கூட அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை. எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை. மிகப்பெரிய விரக்தியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் ஓர் அணியாக சென்றால்தான் திமுகவை … Read more

2024 – ல் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி..! அமமுக- விற்கு 1 % கூட இடம் கிடையாது..! – ஈபிஎஸ்

அமீத்ஷா வந்தாலோ, பிரதமர் மோடி வந்தாலோ,ஏன் நான் சென்று பார்க்கவில்லை என தவறான பரப்புரையை பத்திரிகைகள் பரப்புகின்றது என ஈபிஎஸ் பேட்டி.  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சீர்காழியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.  அப்போது பேசிய அவர், “பூம்புகார்,தரங்கம்பாடி பகுதிகளில் அதிகளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.30,000 வழங்க வேண்டும். அரசு கவனமாக செயல்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பயிர்காப்பீடு செய்யும் … Read more

அமைச்சர் பொன்முடி தெலுங்கு பட வில்லன் போல பேசுகிறார் – டிடிவி தினகரன்

திமுகவினர், தமிழில் வார்த்தை ஜாலம் காட்டுவார்கள். தமிழை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவார்கள் என டிடிவி தினகரன் பேச்சு.  தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், மின் கட்டண உயர்வை கண்டித்து அமமுக சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு டிடிவி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வில் பேசிய டிடிவி தினகரன், திமுகவில் திணிக்கப்பட்ட தலைவர் இருப்பதால் தான் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை … Read more

தமிழகம் முழுவதும் இன்று அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…!

தமிழக அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும்  இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், அரசுத்துறைகள் தோறும் மலிந்து வரும் முறைகேடுகள், மக்களைப் பாதிக்கும் மின் கட்டண உயர்வு, தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுதல், அமைச்சர்களின் அடாவடி பேச்சு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து அமமுக சார்பில் தமிழகம் முழுவதும் அக். 12-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 … Read more