முல்லைப் பெரியாறு அணை நிரம்பி வருவதால், கேரளாவில் வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு அணை நிரம்பி வருவதால் கேரளாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 142 அடியை எட்டியதையடுத்து கேரள அரசு, வெள்ள அபாயஎச்சரிக்கை விடுத்துள்ளது. காலை 7 மணிக்கு பதிவான 141.95 அடியில் இருந்து 10 மணிக்கு 142 அடியாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் 750 கனஅடி நீரை வெளியேற்றி … Read more

#BREAKING: கேரளா ஒத்துழைப்பின்மை: தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம் -உச்சநீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பணிகளை மேற்கொள்ள கேரள அரசு  ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம். முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கும் விவகாரம் தொடர்பாகவும், அணையின் பாதுகாப்பு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், ஏ.எஸ்.ஒகா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பணிகளை மேற்கொள்ள கேரளா ஒத்துழைப்பு அளிப்பதில்லை என தமிழக அரசு … Read more

“முதல்வரே…இதனை பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையினை எதிர்த்து திமுக அரசு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,இது மட்டுமல்லாமல் இதனை பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மத்திய … Read more

#Breaking:தமிழக அரசு சார்பில் இவருக்கு இங்கிலாந்தில் சிலை- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை:இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் சிலை,அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் தமிழக அரசின் சார்பில் நிறுவப்படும் என  முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளதாவது: “தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த,”கர்னல் … Read more

அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுது பார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்ட பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு எந்தவித இடையூறும் அளிக்கக்கூடாது … Read more

“நீர்வளத்துறை அமைச்சர் காமெடி செய்கிறார்” – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கேள்வி கேட்க துணிவின்றி நீர்வளத்துறை அமைச்சர் காமெடி செய்து வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையிலும்,அணை நீர்மட்டத்தை 142 அடிவரை தேக்காமல் கேரளாவிற்கு நீர் திறந்து விட்டதற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் படகில் சென்று … Read more

“பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை பத்து பைசாவாம்” – அமைச்சர் துரைமுருகனை சாடிய ஓபிஎஸ் !

தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தும், அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சனையில் எந்தத் தீர்வும் காணப்படவில்லை என்று ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரள அமைச்சர்கள் முன்னிலையில் கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கையா அல்லது தமிழ்நாடு அரசின் இசைவுடனா அல்லது கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கை என்றால் அங்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் எப்படி கலந்து கொண்டார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளளர். மேலும்,இனியாவது, ‘நடந்தது … Read more

#Breaking:முல்லைப் பெரியாறு:நவ.9 ஆம் தேதி அதிமுக ஆர்பாட்டம் – ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவிப்பு..!

முல்லைப் பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க 5 மாவட்டங்களில் நவ.9 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்பாட்டம்  நடைபெறும் என்று ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி 5 மாவட்ட தலைநகரங்களில் வருகின்ற நவம்பர் 9 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். அதன்படி,தேனி,மதுரை,திண்டுக்கல் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் … Read more

“முல்லைப் பெரியாறு அணை குறித்த தவறான பிரச்சாரம்;தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்”- ஓபிஎஸ் கோரிக்கை..!

முல்லைப் பெரியாறு அணை பழமையானது என்றும்,அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைத்தால் அணைக்கு சேதம் ஏற்படும் என்றும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கேரள அரசுடனான நல்லுறவை பேணி பாதுகாக்கும் அதே வேளையில் முல்லை பெரியாறு பாசன விவசாய பிரதிநிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக … Read more

#Breaking:முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு; இந்திய நிபுணர்கள் மீது நம்பிக்கை இல்லையா?- உச்சநீதிமன்றம் கேள்வி…!

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் இந்திய நிபுணர்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்று மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சர்வதேச நிபுணர்களைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் இந்திய நிபுணர்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்று மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.சர்வதேச நிபுணர்களுக்கு இணையாக இந்திய நிபுணர்களும் அறிவார்ந்தவர்களே என்று … Read more