ஐ.நா.தலைமையகத்தில் டிச.14ம் காந்தி சிலை திறப்பு!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், டிசம்பர் 14-ம் தேதி மகாத்மா காந்தி சிலை திறப்பு. ஐக்கிய நாடு தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை அடுத்த மாதம் டிச.14-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா.தலைமையகத்தின் வடபகுதியில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்படவுள்ளது. காந்தி சிலை திறப்பு விழாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ள உள்ளார். சிலை திறப்பில் ஐ.நா.பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உள்ளிட்ட 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். … Read more

மின் ஒளி வடிவிலான நேதாஜியின் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் முப்பரிமாண மின்னொளி வடிவிலான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி முப்பரிமாண லேசர் சிலையை பிரதமர் இன்று டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் திறந்து வைத்தார். நேதாஜிக்கு கிரானைட்டால் ஆன பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனால் புதிய சிலை அமைக்கப்படும் வரை லேசர் முறையில் முப்பரிமாண நேதாஜி சிலை இந்தியா கேட்டில் ஒளிரும் … Read more

#Breaking:தமிழக அரசு சார்பில் இவருக்கு இங்கிலாந்தில் சிலை- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை:இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் சிலை,அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் தமிழக அரசின் சார்பில் நிறுவப்படும் என  முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளதாவது: “தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த,”கர்னல் … Read more

நாவலர் நெடுஞ்செழியன் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்!

முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் சிலையை சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் உருவச் சிலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இடைக்கால முதலமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் 3 முறை பதவி வகித்துள்ளார். அதிமுக அவைத்தலைவராகவும் இருந்துள்ளார். எனவே, நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும் … Read more

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா சிலைகள் – புதுச்சேரி சட்டப்பேரவையில் வலியுறுத்தல்…!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா அவர்களுக்கு புதுச்சேரியில் சிலைகள் அமைக்க பேரவையில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதுச்சேரியில் 15 வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு புதுச்சேரியில் சிலை வைக்க வேண்டும் என்று புதுச்சேரி திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி வலியுறுத்தினார். இதனையடுத்து,எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறுகையில், “கடந்த ஆட்சியில் கருணாநிதி சிலை அமைக்க இடங்கள் பார்க்கப்பட்டன. சட்டப்பேரவைக்கு … Read more

வீடு கட்ட அஸ்திவாரத்திற்காக தோண்டிய பள்ளத்தில் 8 அடி பெருமாள் சிலை..!

அரியலூர் மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 8 அடி பெருமாள் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமானூர் பகுதியில் இருக்கும் கரையான்குறிச்சி கிராமத்தில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்துள்ள சரவணன் அவருக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் வீடு கட்ட முற்பட்டுள்ளார். அதன் காரணத்தினால் கடந்த 2 நாட்களாக அஸ்திவாரம் போடுவதற்கு பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது அந்த இடத்தில் நேற்று 4 அடி தோண்டிய பொழுது, அங்கு சிலை போன்று ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர். பின்னர் அந்த கற்சிலையை … Read more

“பொது இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத சிலைகளை அகற்ற வேண்டும்” உயர்நீதிமன்ற மதுரை கிளை!

தமிழகத்தில் பொது இடங்கள், சாலையோரங்கள், அரசு இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பொது இடங்களில், அனுமதியின்றி நிறுவப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும் என்று தஞ்சாவூரை சேர்ந்த வைரசேகர் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வலக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற 2016 மத்திய … Read more

அனுமதியின்றி அரசு நிலத்தில் நிறுவப்பட்டிருந்த அம்பேத்கார் சிலை அகற்றம்!

உத்திர பிரதேச மாநிலத்தில் அனுமதியின்று அரசு நிலத்தில் வைக்கப்பட்டிருந்ததாக அம்பேத்காரின் சிலை அகற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹி எனும் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அரசு நிலத்தில் அனுமதியின்றி அம்பேத்காரின் சிலையை நிறியதற்காக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலையும் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலர் கூடி தான் 4 பாடியுள்ள இந்த அம்பேத்காரின் சிலையை நிறுவியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிலை நிறுவப்பட்ட அன்றே அவ்விடத்தில் காவலுக்கு நின்ற … Read more

ஊட்டியில் கருணாநிதி சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!

ஊட்டியில் கருணாநிதி சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் உருவச் சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதன்பின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், முதல்வராக இருந்து தமிழகத்தை வளர்த்தவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார். மேலும் நீலகிரி மாவட்ட மக்களுக்கு, கருணாநிதி செய்த நலத்திட்டங்களையும் பட்டியலிட்டு பேசியுள்ளார்.

சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்.!

திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று திறந்து வைக்கிறார்.  திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று திறந்து வைக்கிறார். அதாவது பத்திரிகை, கல்வி, இலக்கியம் போன்றவைகளில் சிறந்த சேவை ஆற்றிய மறைந்த சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில், ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த மணிமண்டபத்தில் … Read more