நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் கைது .! அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை.!

நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் உடனே கைதுசெய்யப்படுவீர்கள் என அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.  வேலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டி அசுத்தப்படுத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளார். நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவது மிகப்பெரிய குற்றம் ஆகும். ஆகையால் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதனை தடுக்க குற்றம் செய்பவர்கள் கடுமையான சட்டத்தால் தண்டிக்க படவேண்டும் என்றும் கூறியுள்ளார். நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினாலோ, அசுத்தம் செய்தாலோ தனக்கு ஒரு போன் செய்தால் போதும் … Read more

“பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை பத்து பைசாவாம்” – அமைச்சர் துரைமுருகனை சாடிய ஓபிஎஸ் !

தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தும், அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சனையில் எந்தத் தீர்வும் காணப்படவில்லை என்று ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரள அமைச்சர்கள் முன்னிலையில் கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கையா அல்லது தமிழ்நாடு அரசின் இசைவுடனா அல்லது கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கை என்றால் அங்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் எப்படி கலந்து கொண்டார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளளர். மேலும்,இனியாவது, ‘நடந்தது … Read more