நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் கைது .! அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை.!

நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் உடனே கைதுசெய்யப்படுவீர்கள் என அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். 

வேலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டி அசுத்தப்படுத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளார். நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவது மிகப்பெரிய குற்றம் ஆகும். ஆகையால் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.

இதனை தடுக்க குற்றம் செய்பவர்கள் கடுமையான சட்டத்தால் தண்டிக்க படவேண்டும் என்றும் கூறியுள்ளார். நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினாலோ, அசுத்தம் செய்தாலோ தனக்கு ஒரு போன் செய்தால் போதும் எனவும் கூறியுள்ளார். மேலும், அசுத்தப்படுத்துவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என அமைச்சர் துரைமுருகன் அந்தக் கூட்டத்தில்  கூறியுள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment