#Breaking:”நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது.சட்டமன்றத்தில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காததால் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

குடியரசு தலைவருக்கு நீட் விலக்கு மசோதா அனுப்பாததால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அதன்படி,அதிமுக,பாஜக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில்,தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் கூறியதாவது:

“திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமரை நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுத்தேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும்,மாநிலங்களவையிலும் நீட் விலக்கு கோரி வலியுறுத்தினார்கள்,இதனைத் தொடர்ந்து,நீட் விலக்கு சட்ட முன்வடிவு செப் 13 ஆம் தேதி சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றினோம்.அதன்பின்னர்,இந்த சட்ட முன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதல் பெற மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.

ஆனால்,நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளார்.மாநில உரிமையும்,சட்டமன்றத்தின் அதிகாரமும் கேள்விக்குறியானதால் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் அவசரமாக, அவசியத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஒரு வரைவுத் தீர்மானத்தை எடுத்துரைப்பார். நமது அனைவரின் இழக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தான்.

மேலும்,தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான்.எனவே,வரைவுத் தீர்மானத்தின் மீது உங்களது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.