விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்? உயர்நீதிமன்றக் மதுரை கிளை கேள்வி?

விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்? தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (72). விவசாயி. இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடையம் வனத்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், விசாரணைக்கு அழைத்து சென்ற போது, அணைக்கரை முத்துவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு … Read more

மை லார்ட் என அழைக்க வேண்டாம்.! சார் என அழைத்தாலே போதும்.! தலைமை நீதிபதி எழுதிய கடிதம்

நீதிபதிகளை ‘மை லார்டு’ என அழைக்க வேண்டாம் என்றும் ‘சார்’ அழைத்தாலே போதும் – கொல்கத்தா தலைமை நீதிபதி டி.பி.என்.ராதாகிருஷ்ணன். கொல்கத்தா தலைமை நீதிபதி டி.பி.என்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட நீதிபதிகளுக்கும் அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமை நீதிபதிகளுக்கும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தலைமை நீதிபதிகளை ‘மை லார்டு’ என அழைக்க வேண்டாம் என்றும் ‘சார்’ அழைத்தாலே போதும் என தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.

சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு ஜாமீன் – சென்னை எழும்பூர் நீதிமன்றம்

சென்னை எழும்பூர் நீதிமன்றம், தணிகலாசத்திற்கு, நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியது. சென்னை, கோயம்பேட்டில் சித்த மருத்துவர் தணிகாசலம், சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் கொரோனா வைரஸை அளிப்பதற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தமிழக முதல்வர் அனுப்பிய இருவருக்கு கொரோனா வைரஸை குணப்படுத்தி விட்டதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தது. இதனையடுத்து, இதுகுறித்து சுகாதாரத்துறை புகார் அளித்ததை தொடர்ந்து, நோய்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் தணிகலாசத்தை, குண்டர் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். … Read more

#முடக்கம்# 329.66 கோடி சொத்து..! கோட் அமலாக்கத்துறைக்கு குட்டு

நிரவ் மோடிக்கு சொந்தமான, 329.66 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில், நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்ஸி ஆகியோர்,  14 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்தது தொடர்பாக, சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது. வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற நீரவ் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார்.இந்நிலையில்  தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகளை, சி.பி.ஐ தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சட்ட விரோத பணப் … Read more

இதுவரை 9 பெண்களை கொலை செய்த கொடூரன்! மரண தண்டனை கொடுத்த நீதிமன்றம்!

தொடர் கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபட்டு வந்த நபருக்கு மரண தண்டனை. மேற்கு வங்கம் மாநிலத்தில் வசித்து வருபவர், கம்ருஸ்மான் சர்க்கார் (38). இவர் அந்த மாநிலத்தில் தொடர்ந்து தொடர் கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் இதுவரை 9 பெண்களை கொலை செய்துள்ளார். மேலும், இதில் 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 16 வயது சிறுமியை பாலியல் … Read more

ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கு -9-ஆம் தேதி தீர்ப்பு

ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு மீது வருகின்ற 9-ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.  அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு எதிராக பல இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தியது.பாஜகவை தவிர்த்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.ஆனால் இந்த விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் ,வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.  … Read more

பேராசிரியர் நிர்மலா தேவி உள்ளிட்ட மூவரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு.!

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழில் ஆசை கூறி தவறான பாதைக்கு வழி நடத்திய வழக்கு தொடர்பாக, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலா தேவி உட்பட 3 பேர் இன்று ஆஜராகினர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கூர் தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி கடந்த வருடம் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொழில் ஆசை கூறி தவறான பாதைக்கு வழி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய … Read more

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு? – நாளை விசாரணை

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட  புதிய தேதியை அறிவிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.  கடந்த  2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு … Read more

#Breaking: தூத்துக்குடி துப்பாக்கிசூடு- ரஜினி நேரில் ஆஜராக சம்மன்.!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து  கருத்து தெரிவித்தது தொடர்பாக  நடிகர் ரஜினிகாந்த் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த  2018-ஆம்  ஆண்டு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராகபோராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ( 2018 ஆம் ஆண்டு மே 22-ம் தேதி ) போலீசார் நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். ஆனாலும் ஆலை … Read more

சிறுமி பாலியல் வன்கொடுமையில் இந்த 15 பேர் தான் குற்றவாளிகள் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இது சுமார் 11 மாதங்களாக நடைபெற்று … Read more