பேராசிரியர் நிர்மலா தேவி உள்ளிட்ட மூவரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு.!

  • கல்லூரி மாணவிகளை பாலியல் தொழில் ஆசை கூறி தவறான பாதைக்கு வழி நடத்திய வழக்கு தொடர்பாக, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலா தேவி உட்பட 3 பேர் இன்று ஆஜராகினர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கூர் தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி கடந்த வருடம் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொழில் ஆசை கூறி தவறான பாதைக்கு வழி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய மூவரை கைது செய்யப்பட்டனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீன் கிடைக்காமல் 11 மாதம் சிறையில் இருந்து வந்த நிர்மலா, கடந்த மார்ச் மாதம் ஜாமினில் வெளி வந்தார்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பேராசிரியர் நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வழக்கிலிருந்து விலகினார். இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் நிர்மலாதேவி, மற்றும் முருகன் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராயினர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரையும் வரும் 26-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்