தூத்துக்குடி மக்களின் போராட்டத்தின் வெற்றி: ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கனிமொழி கருத்து

Kanimozhi: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விதிமீறல்கள் பல இருப்பதால் தான் அரசு மற்றும் உயர்நீதிமன்றம் உரிய முடிவு எடுத்துள்ளது என்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில … Read more

ஸ்டெர்லைட் எங்களுக்கு தேவையில்லை.! தமிழக அரசு திட்டவட்டம் .!

Sterlite Case in Supreme court of India

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுசூழல் மாசுபடுகிறது, அங்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என கூறி எதிர்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்த வேளையில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மீண்டும் தூத்துக்குடியில் … Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு..! இறுதி விசாரணை 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இறுதி விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலை மூடலுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று தொடங்கியது. அதன்போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற யோசனையை உச்சநீதிமன்றம் முன் வைத்தது. மேலும், தற்போது உள்ள இடத்தில் அமைந்துள்ள காப்பர் தொழிற்சாலை … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துக்கு பல தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில், தனது இடைக்கால அறிக்கையை … Read more

#BREAKING: ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்., 93 பேருக்கு தலா ஒரு லட்சம்- தமிழக அரசு..!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் தமிழக அரசு வாபஸ் பெற்றது.  ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்று துப்பாக்கி சூடு மூன்றாண்டு நிறைவடைய உள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் தமிழக அரசு வாபஸ் பெற்றது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் … Read more

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!

ஸ்டெர்லைட் வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. சுற்றுசூழலுக்கு கேடு விளைவிப்பதாக கூறி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசானது சீல் வைத்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உயர் நீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை … Read more

சிந்திய இரத்தம் வீண் போகாது – தொல். திருமாவளவன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உயர்நீதிமன்றம் தீர்ப்பு பலியான 13 பேருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் யாவருக்கும் அளிக்கப்பட்ட நீதி- தொல் திருமாவளவன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அரசியல் பிரபலங்கள் பலரும் வரவேற்று வரும் நிலையில், … Read more

இது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி – அன்புமணி ராமதாஸ்

உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி இந்த விவகாரத்தில் இறுதி வெற்றியை தமிழக அரசு பெற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அரசியல் பிரபலங்கள் பலரும் வரவேற்று வருகின்றனர். அந்த … Read more

மக்களின் உணர்வுகளுக்கும், தியாகத்திற்கும் கிடைத்திருக்கும் வெற்றி – டிடிவி தினகரன்

ஸ்டெர்லைட் ஆலையை சட்டப்படி நிரந்தரமாக மூடும் வரை தமிழக அரசு எல்லா நிலைகளிலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் – டிடி தினகரன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. … Read more

815 பக்கங்கள் கொண்ட முழு தீர்ப்பை பிற்பகல் இணையதளத்தில் பதிவேற்றம் – உயர்நீதிமன்றம்

815 பக்கங்கள் கொண்ட முழு தீர்ப்பை பிற்பகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்த தமிழக அரசின் உத்தரவு தொடரும் எனவும் கூறியுள்ளது. உயர்நீதிமன்ற நிதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு 815 பக்க தீர்ப்பை வழங்கினர். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை … Read more