#Breaking: தூத்துக்குடி துப்பாக்கிசூடு- ரஜினி நேரில் ஆஜராக சம்மன்.!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து  கருத்து தெரிவித்தது தொடர்பாக  நடிகர் ரஜினிகாந்த் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த  2018-ஆம்  ஆண்டு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராகபோராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ( 2018 ஆம் ஆண்டு மே 22-ம் தேதி ) போலீசார் நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். ஆனாலும் ஆலை செயல்படுவதற்கு எதிராக மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது.

ஆனால் அந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி வந்தார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்தார். காயமடைந்தவர்களுக்கு அரசு  மருத்துவமனையில் ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த். இதன் பின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறுகையில், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் என்று கூறினார்.

இதற்குஇடையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்