ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!29 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணி உட்கொண்ட 10 வயது சிறுமி இறந்துள்ளார், மேலும் 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரணி பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள 7 நட்சத்திர ஹோட்டலில் உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த ஹோட்டலில் … Read more

108 சங்காபிஷேகம்..கொரோனா அழிய திருவண்ணாமலையில் வழிபாடு.!

திருவண்ணாமலையில்  உலக  மக்கள் நலமுடன் வாழ வேண்டியும்  அருணாசலேஷ்வரர் கோவிலில் அருள்பாலித்து வரும் காலபைரவருக்கு 108 சங்காபிஷேக பூஜை வெகுச்சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும்,அவ்வைரஸ் அழிய வேண்டி கடந்த மார்ச்.,30 கோவிலில் தன்வந்திரி யாகம் நடைபெற்றது.இந்நிலையில்  பங்குனி வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு மக்கள் நலமுடன் வாழ கால பைரவருக்கு 108 சங்காபிஷகமும், சிறப்பு பூஜைகளும் நடை பெற்றது. ஊடங்கு உத்தரவு காரணமாக பக்தர்களை கோவிலினுள் அனுமதிக்கவில்லை

கழுத்தில் அணிந்த துணி..!இயந்திரத்தில் சிக்கி…கழுத்து இறுக்கி…இளைஞர் பரிதாபம்

இயந்திரத்தில்  கழுத்தில் அணிந்திருந்த துணி சிக்கி கழுத்து இறுக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது திருப்பூர் அருகே பரிதாபம் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை இவர் திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையத்தின் பிரிவு அருகே ஒரு இறைச்சிக்கடையொன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.சம்பவத்தன்று  பணி முடிந்த நிலையில் இறைச்சி வெட்ட பயன்படுத்தக்கூடிய கட்டையை அரவை இயந்திரம் மூலமாக சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த அரவை இயந்திரத்தில் ஏழுமலை தன் கழுத்தில் அணிந்திருந்த துணியானது … Read more

பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோஷத்துடன் 2,668 அடி உயரத்தில் திருவண்ணமலை மகாதீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி தீப திருவிழா தொடங்கியது.  இன்று திருவண்ணமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா நவம்பர் மாதம் 28-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. இன்று முக்கிய நிகழ்வான மகாதீபம் ஏற்றும் விழா நடைபெற்றுவருகிறது. இதனை காண திருவண்ணாமலையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதன் பின்னர் … Read more

3 ம் வகுப்பு படிக்கும் மாணவியின் உலக சாதனை – திருக்குறளில் படைத்த சாதனை

திருவண்ணாமலை வந்தவாசி அருகே அரசுப்பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மனைவி தர்ஷினி. 4 நிமிடம் 49 வினாடிகளில் 150 திருக்குறளை ஒப்புவித்து உலக  சாதனை படைத்துள்ளார். கல்லாகுத்து கிராமத்தைச் சேர்ந்த ஆனைக்குட்டி – சத்யா தம்பதியின் மகள் தர்ஷினி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த தர்சினி அங்குள்ள அரசுப்பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படிக்கிறார். சிறு வயதில் இருந்தே திருக்குறளில் அதிகம் நாட்டம் கொண்ட மாணவி அதில் சாதனை படைத்துள்ளார். ஒன்றாம் படிக்கும் பொது 1 நிமிடத்தில் … Read more

பெற்றோர் கண் முன்னே மின்சாரத்திற்கு பலியான 8 வயது சிறுவன்!மறியலில் ஈடுபட்ட பெற்றோர்!

திருவண்ணாமலையில் உள்ள தியாகி அண்ணாமலை தெருவில் வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார்.அங்குள்ள ஒரு பள்ளியில் இவரது 8 வயது மகன் ரகுநாதன் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக திண்டிவனம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது. தற்போது தாலுகா அருகில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்குள்ள விளக்கின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு மூடி வைக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் ஜூலை 9-ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே … Read more

மனைவியுடன் சேர்ந்து 35 வயதான பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த கணவன்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாப்பட்டு சம்பந்தனூர் பகுதியை சேர்ந்தவர் நரேந்திரன் ஆவார்.இவர் அவரின் மனைவியின் 35 வயதான ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் கணிணி தொழில்நுட்பத்தின் மூலம் அந்த பெண்ணின் புகைப்படத்தை நிர்வாணமாக இருப்பது போன்று செய்து வாட்ஸ ஆப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார். இதனை அறிந்த அந்த பெண் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்போது நரேந்திரனும் அவரது மனைவியும் அவரை தாக்கி இனிமேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் கொலை செய்துவிடுவதாக … Read more

முக்தி அளிக்கும் மூர்த்தியாக அருளும் அருணாசலேஸ்வரர்..!ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்.!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலானது  பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான  அக்னி தலமாக விளங்குகிறது.இத்திருத்தலத்தில் சிவபெருமான் ஜோதி ரூபமாக அருட்காட்சியளிக்கிறார்.அய்யனை காண  தினமும் உள்ளூர் மட்டுமல்லாமல்  வெளியூர் என வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.இந் நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலமானது நேற்று மதியம் 1.17 மணிக்கு தொடங்கி இன்று காலை 11.08 வரை நடைபெற உள்ளது. இந்த பவுர்ணமியை முன்னிட்டு … Read more

திருவண்ணாமலையில் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்தில் வீதி உலா..!!!

திருவண்ணாமலையில் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்தில் வீதி உலா நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் வெகுச்சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தனித்தனி வெள்ளி மற்றும் கண்ணாடி விமானத்தில் மாடவீதியில் பவனி வர பக்தர்கள் பக்தி கோஷத்துடன் சுவாமி தரிசனம் பெற்றனர்.இந்நிலையில் இரவு 10 மணியளவில் வாணவேடிக்கையுடன் சாமி வீதி உலா நடந்தது. கார்த்திகை திருவிழாவின் 2-ம் நாளான நேற்று திருவண்ணாமலையில் காலை 11 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், … Read more

திருவண்ணாமலையில் ரசிகரின் உடலை பார்த்து துக்கம் தாங்காமல்,கதறியழுத நடிகர் கார்த்தி ….

திருவண்ணாமலையில் விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலுக்கு நடிகர் கார்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜீவன்குமார், கார்த்தி மக்கள் நல மன்ற மாவட்ட செயலாளராக உள்ளார். நேற்றுமுன் தினம் தாம்பரம் இரும்புலியூரில் நடைபெற்ற கார்விபத்தில் ஜீவன்குமார், அவரது நண்பர் தினேஷ் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலையில் உயிரிழந்த ஜீவன்குமாரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி கலந்து ஜீவன்குமாருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாங்காமல் , நடிகர் கார்த்தி … Read more