மாணவர்களின் மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கண்டெடுப்பு..! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!

rat

மேற்கு வங்கத்தில் தொடக்கப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கண்டெடுக்கப்பட்டுள்ளது.  மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள சஹுர்காச்சி பித்யானந்தபூர் தொடக்கப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மால்டா மாவட்ட நீதிபதி நிதின் சிங்கானியா கூறுகையில், ‘மதிய உணவில் இறந்த பல்லி மற்றும் எலி கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான புகார் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

sekarbabu

மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்கமாட்டார் என அமைச்சர் சேகர்பாபு பேச்சு. பெருமழை காலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவினால் அறநிலையத்துறை சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்கமாட்டார். தமிழக அரசு மதம், சாதி சார்ந்தது அல்ல, ஆளுநர் வேலை இல்லாமல் ஏதாவது பேசி கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். இதனிடையே, … Read more

“இரு வேளை மட்டுமே உணவு;இனிதான் மோசமான விஷயங்கள்” – எச்சரிக்கும் இலங்கை பிரதமர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கை மக்கள் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சை அடைந்து வருகின்றனர்.அவ்வப்போது,கடல் வழியாக பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் சிலர் கைதும் செய்யப்படுகின்றனர். இந்நிலையில்,இலங்கை மக்கள் தினமும் இரு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக,இலங்கை கல்லூரியில் நிகழ்வில் பேசிய பிரதமர் ரணில் … Read more

5 நாட்கள் நாய் உணவை சாப்பிட்டால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்..! ஆம்னி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!

5 நாட்கள் நாய் உணவை சாப்பிட்டால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என நாய் உணவு தயாரிக்கும் ஆம்னி நிறுவனம் அறிவித்துள்ளது.  இன்று அதிகமானோர் வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கப்படுவதுண்டு. அந்த செல்லப்பிராணிகளுக்கு என விதவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாய்களுக்கு உணவு தயாரிக்கும் ஆம்னி என்ற ஒரு நிறுவனம் காய்கறிகள், பழங்கள் கொண்டு தூய்மையான முறையில் மனிதர்களும் சாப்பிடும் வகையில் எந்த ஒரு கெமிக்கல் சேர்க்காமல்  உணவு தயாரிக்கின்றனர். இந்த நிலையில் நிறுவனம் … Read more

30 வருடங்களாக கழிவறையில் உணவு தயாரிப்பு…! அதிரடியான நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்..!

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயாரிக்கப்பட்டு வந்ததையடுத்து, உணவகத்தை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவு. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட பிற உணவுகளில் கழிவறையில் தயாரிக்கப்பட்ட செய்தி நகராட்சி அதிகாரிகள் ரகசியமாக கிடைத்ததையடுத்து, அவர்கள் உணவகத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது உணவகத்தின் குளியலறையில் கடந்த 30 ஆண்டுகளாக … Read more

#BREAKING: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி – உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்ப்பு!

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்ப்பு. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் உள்ளிட்ட உணவு வகைகளை சேர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உணவு செலவுக்கான மானியத்தில் மாற்றம் இல்லாமல் உணவு வகைகளை மாற்றி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தோசை, இடியாப்பம் உட்பட புதிய சிற்றுண்டிகளும் சேர்க்கப்பட்டு, தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. ஏற்கனவே, கிச்சடி, பூரி, இட்லி, பொங்கல் வழங்கப்பட்டு வந்த நிலையில், தோசை … Read more

சாப்பிட்ட உடனேயே குளிக்கிறீர்களா? இந்த பிரச்சனை ஏற்படும்..!

சாப்பிட்ட பின் குளிக்க கூடாது என்பது உண்மையா? இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். நமது பரபரப்பான வாழ்க்கையில், சாப்பிடும் போது, ​​அதற்கு சரியான நேரம் ஒதுக்குவதில்லை. நம்மில் பெரும்பாலோர் சாப்பிட்ட பிறகு தூங்குவது அல்லது உணவுக்கு முன்னும் பின்னும் போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற சில தவறுகளை செய்கிறோம். மேலும், சாப்பிட்ட உடனேயே குளிக்கக் கூடாது என்று வீட்டில் பெரியவர்கள் பலமுறை கூறி கேட்டிருப்பீர்கள். உணவு உண்ட பிறகு குளிப்பது நல்லதல்ல என்பது பலருக்குத் தெரியும், … Read more

“வினாவுக்கு விடை கிடைக்கவில்லை” – பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை!

விடுதிகளில் தங்கியுள்ள தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனைகள் எப்போது தீரும்? என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற உணவு, கால்நடைகளைப் போன்று சிறிய அறையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்க வேண்டிய அவலம்,நோய்களை பரப்பக்கூடிய கழிவறைகள் போன்றவை தான் தொழிலாளர்களுக்கான விடுதிகளின் அடையாளங்கள் என்றும்,எனவே, தொழிற்சாலை விடுதிகளில் தரமான உணவு,அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை … Read more

அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு நிறுத்தம்.!

அம்மா உணவகங்களில் இன்று முதல் மீண்டும் மலிவு விலையில் உணவு விற்பனை என்று மாநகராட்சி அறிவிப்பு. சென்னை அம்மா உணவகங்களில் இன்று முதல் வழக்கம்போல் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. மழைக்காலத்தையொட்டி விலையில்லா உணவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகள் குறைந்ததால் பழைய முறையில் அம்மா உணவகங்களில் இன்று முதல் உணவுக்கு கட்டணம் … Read more

வடகொரியாவில் உணவு பஞ்சம் : 2025 வரை குறைவாக உண்ண உத்தரவு!

வடகொரியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், 2025 வரை குறைவாக உணவு உண்ண வேண்டும் என அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக வட கொரியா நாடு பிற நாடுகளுடன் எல்லைக்கு சீல் வைத்து கொண்டது. மேலும், உணவுப் பொருட்கள் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் வடகொரியா மூடியது. இதனால் வட கொரியாவில் உணவுப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு கிலோ வாழைப்பழம் இந்திய மதிப்பில் 3,300 … Read more