பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 62,069 புள்ளிகளாக வர்த்தகம்..!

May 24, 2023 - 05:29
 0  1

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 87.88 புள்ளிகள் உயர்ந்து 62,069 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,348 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக சரிவில் வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் 3வது நாளான இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 61,834 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 87.88 புள்ளிகள் அல்லது 0.14% என உயர்ந்து 62,069 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 34.70 புள்ளிகள் அல்லது 0.19% உயர்ந்து 18,382 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,981 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,348 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.

பஜாஜ் ஃபின்சர்வ், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ் லிமிடெட், ஐடிசி லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. கோடக் மஹிந்திரா வங்கி, லார்சன் & டூப்ரோ, டைட்டன் நிறுவனம், பார்தி ஏர்டெல், மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow