மணிப்பூரில் இன்னும் மக்கள் பதுங்கி வாழ்கிறார்கள்... இயல்பு நிலை திரும்பவில்லை.! திமுக எம்பி திருச்சி சிவா பேட்டி.!

Aug 7, 2023 - 06:37
 0  2
மணிப்பூரில் இன்னும் மக்கள் பதுங்கி வாழ்கிறார்கள்... இயல்பு நிலை திரும்பவில்லை.! திமுக எம்பி திருச்சி சிவா பேட்டி.!

கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி துவங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை 11வது நாள் வரையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது.

நாடாளுமன்றத்தில் மற்ற அலுவல் விவகாரங்களை தவிர்த்து மணிப்பூர் கலவரம் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர். விரிவான விவாதத்திற்கு இரு அவைகளிலும் சபாநாயகர் அனுமதி தராததால் தொடர் அமளி ஏற்பட்டு 11 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கி வருகிறது.

இன்று  மழைக்கால கூட்டத்தொடர் 12வது நாள் துவங்கிய நிலையில்,  திமுக மாநிலங்கவளை எம்பி திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில்,  12வது நாளாக நாடளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளளோம். மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த இன்றும் கோரிக்கை வைத்துள்ளோம் . பெயரளவிற்கு சிறிய விவாதம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்தார்.

மேலும், மணிப்பூரில் இன்னும் கலவரங்கள் அடங்கவிலை. மக்கள் பலர் தற்போதும் நிவாரண முகாம்களிலும், காடுகளில் பதுங்கியும் வாழ்ந்து வருகின்றனர். பாஜக அவர்களுக்கு தேவையான நிலையில் சாதகமாகவும், மற்ற நேரங்களில் வேறு மாதிரியும் நடந்துகொள்வார்கள். ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை என்ற தீர்ப்பு வந்த சில மணிநேரங்களில் அவரது எம்பி பதவியை பறித்த பாஜக, தற்போது உச்சநீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைத்ததும் இன்னும் எம்பி பதவியை அளிக்காமல் இருக்கின்றனர் என திமுக எம்பி  திருச்சி சிவா தனது விமர்சனங்களை முன்வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow