பாரா ஆசிய விளையாட்டு - இன்று 4வது தங்கம், 3 வெண்கலம், 4 வெள்ளி.. பதக்க வேட்டையில் இந்தியா!

Oct 27, 2023 - 05:29
 0  1
பாரா ஆசிய விளையாட்டு - இன்று 4வது தங்கம், 3 வெண்கலம், 4 வெள்ளி.. பதக்க வேட்டையில் இந்தியா!

2023ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான 4-ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 5வது நாளான இன்று பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று போட்டி தொடக்கத்தில் இருந்து இந்தியர்கள் பதக்கங்களை குவித்து வருகிறன்றனர். இன்று மட்டும் தற்போது வரை 3 தங்கம், 3 வெண்கலம், 3 வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளனர்.

இதில், 5வது நாளான இன்று வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஷீதல் தேவி தங்கப் பதக்கம் வென்றார். மகளிர் வில்வித்தை தனிநபர் பிரிவில் சிங்கப்பூரின் அலீம் நூர் என்பவரை வீழ்த்தி ஷீதல் தேவி தங்க பதக்கம் வென்று அசத்திருந்தார். இதுவே இன்றைய நாளில் முதல் தங்கப்பதக்கம் ஆகும்.

பாரா ஆசிய விளையாட்டில் 1,500 மீட்டர் ஒட்டப்பந்தியத்தில் இந்தியாவின் ராமன் சர்மா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆடவருக்கான, 1,500 மீட்டர் டி-38 ஒட்டப்பந்தியத்தில் 4:20.80 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து ராமன் சர்மா தங்கப் பதக்கம் வென்றார். இதுபோன்று, பாரா ஆசிய விளையாட்டில் பேட்மிண்டன் போட்டியில் எஸ்எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் தங்கப்பதக்கம் வென்றார். பாரா ஆசிய விளையாட்டு: 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம்!

இதுபோன்று பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் துளசிமதி முருகேசன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதாவது, பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில் 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவின் குயிசியா யாங்கை வீழ்த்தி துளசிமதி முருகேசன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இது இன்றைய நாளில் 4வது தங்கமாகும்

பேட்மிண்டன் மற்றொரு எஸ்எல் 6 பிரிவில் இந்தியாவின் நிதிஷ் வெள்ளி பதக்கம் வென்றார். பாரா ஆசிய விளையாட்டில் பேட்மிண்டனில் SH6 பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் வெள்ளி பதக்கம் வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் எஃப் 54 பிரிவில்  இந்திய வீரர்கள் பிரதீப் குமார் வெள்ளி, அபிஷேக் சமோலி மற்றும் லக்ஷித் வெண்கலம் பதக்கம் வென்றனர். வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் லட்சுமி வெண்கலம் பதக்கம் வென்றார்.

மேலும், ஆடவருக்கான தனிப்பட்ட கூட்டு வில்வித்தை போட்டியில், ஈரானின் அலிசினா மன்ஷேசாதேவுக்கு எதிராக நடந்த போட்டியில், இந்திய வில்வித்தை வீரர்  ராகேஷ் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.  மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இதுவரை 22 தங்கம் உட்பட 90க்கும் மேற்பட்ட  பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 5 ம் இடத்தில் உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow