15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியல்... பாஜகவிடம் கொடுத்த ஓபிஎஸ்!

Mar 12, 2024 - 05:25
 0  0
15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியல்... பாஜகவிடம் கொடுத்த ஓபிஎஸ்!

OPS : மக்களவை தேர்தலில் 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை பாஜகவிடம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் திமுக, அதிமுக ஒருபக்கம் மும்மரமாக செயல்பட்டு வருகிறது.

Read More - மத்திய அரசை எதிர்ப்பதில் தயக்கம் ஏன்? தவெக தலைவர் விஜய் மீது விமர்சனம்.!

மறுபக்கம் பாஜக, தங்களது தலைமையிலான கூட்டணியை அமைத்து வருகிறது. இதுவரை, தமிழ் மாநில காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி, அமமுக உள்ளிட்ட காட்சிகள் பாஜகவுடன் கைகோர்த்து மூன்றாவது அணியாக உருவாகி வருகிறது. இதில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு நிர்வாகிகளும் பாஜகவுடன் இணைந்து வரும் மக்களவை தேர்தலை சந்திக்க போகிறார்கள்.

பாஜகவுடன் இணைந்து வரும் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ள ஓபிஎஸ், நாங்கள் பாஜகவில் தான் தொடர்கிறோம் என்றும் பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுவார் எனவும் தொடர்ந்து கூறிவருகிறார். இதனால்,  பாஜவுடனான கூட்டணியில் ஓபிஎஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More - சிஏஏ சட்டம்! நாங்கள் அமல்படுத்தமாட்டோம்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி!

அதன்படி, பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தார் ஓபிஎஸ். இந்த சூழலில் மக்களவை தேர்தலில் தொடர்பாக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையானது நேற்றிரவு சுமார் 1 மணிநேரத்துக்கு மேலாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், பாஜகவுடன் ஓபிஎஸ்  தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை பாஜகவிடம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More - 1000 ரூபாய் பிச்சை சர்ச்சையும்… குஷ்பூ கொடுத்த அதிரடி விளக்கமும்…

மத்திய சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி உள்ளிட்ட 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை பாஜகவின் கிஷன்ரெட்டி, விகே சிங் மற்றும் இணையமைச்சர் எல் முருகன் ஆகியோரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. எனவே, பாஜகவிடம் எந்தந்த தொகுதி, எத்தனை தொகுதிகளில் ஓபிஎஸ் தரப்பு போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow