வயிற்றுப் புண்ணை ஆற்றும் மணத்தக்காளி காய்.! இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா யாரு வேண்டாம்னு சொல்லுவா.?

Dec 5, 2023 - 06:33
 0  2
வயிற்றுப் புண்ணை ஆற்றும் மணத்தக்காளி காய்.! இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா யாரு வேண்டாம்னு சொல்லுவா.?

கீரைகளை நம் உணவில் சமைத்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல் அதிலிருந்து கிடைக்கும்ஒரு சில காய்களையும் நாம் சமைத்து சாப்பிடுவோம். அந்த வகையில், இன்று மணத்தக்காளி கீரையின் காய்களை கசப்பே இல்லாமல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

  • எண்ணெய்    -  மூன்று ஸ்பூன்
  • கடுகு   -  ஒரு ஸ்பூன்
  • வெந்தயம்   -  ஒரு ஸ்பூன்
  • சீரகம்   -  ஒரு ஸ்பூன்
  • சின்ன வெங்காயம்  - 10
  • தக்காளி  -  இரண்டு
  • புளி - எலுமிச்சை அளவு
  • மிளகாய்த்தூள்   - இரண்டு ஸ்பூன்
  • மல்லித்தூள்   - இரண்டு ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்  -  இரண்டு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து பொரிந்த உடன் மணத்தக்காளி காம்புகளை நீக்கி அதனை சேர்த்து வதக்கவும். இவ்வாறு எண்ணெயில் இந்த காய்களை வதக்கும்போது கசப்பு தன்மை இருக்காது. பின்பு அதிலே பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

இப்படி பட்டாணி சாதம் பண்ணி பாருங்க! பிரியாணியே தோற்றுவிடும்!

தக்காளி வதங்கியவுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கலந்து விடவும். கரைத்து வைத்துள்ள புளி கரைசலையும் அதனுடன் சேர்த்து தண்ணீர் குறைவான அளவு ஊற்றி கலந்து கொதிக்க விடவும். கொதித்த பிறகு இறக்கினால் மணக்க மணக்க மணத்தக்காளி காய் குழம்பு தயார்.

நன்மைகள்

  • மணத்தக்காளி கீரையில் மட்டுமல்லாமல் அதன் காய்களிலும் அதிக அளவு விட்டமின் சத்துக்களும் மினரல் சத்துக்களும் நிறைந்துள்ளது.
  • இவற்றை நாம் வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டு வரும்போது பல நன்மைகளை பெறலாம் .

வயிற்று பகுதி

  • வாய் மற்றும் வயிற்று புண்ணை ஆற்ற பயன்படுகிறது. சிறந்த சிறுநீர் பெருக்கியாகவும் உள்ளது. இரைப்பை புண்களையும் ஆற்றும் தன்மையை கொண்டுள்ளது.

தொண்டை

  • தொண்டைக் கட்டிக்கொள்வதை குணப்படுத்துகிறது. சளி இருமல் இருப்பவர்கள் இந்தக் கீரை அல்லது காய்களை குழம்பு செய்து சாப்பிட்டு வரலாம்.

உடல் வலி

  • காய்ச்சலுக்கு பின் வரும் உடல் வலி மற்றும் சோர்வை குணப்படுத்தக் கூடியது. கல்லீரல் வலிமை பெறவும் அதில் ஏற்படும் தொற்று மற்றும் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் சக்தியையும் கொண்டுள்ளது.

அத்திப்பழம் பிரியர்களே! அத்திப்பழம் சாப்பிடுவதற்கு முன்பு இதையும் தெரிஞ்சுக்கோங்க..

உடல் உஷ்ணம்

  • உடல் உஷ்ணம் உள்ளவர்கள் தொடர்ந்து இதை எடுத்து வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாகும்.கர்ப்பப்பையை வலுவாக்குகிறது.
மணத்தக்காளி கீரையை சமைத்துவிட்டு கசப்பு சுவை காரணமாக அதன் காய்களை தூர போட்டு விடுவோம். ஆனால், இனிமேல் இந்த மாதிரி செய்யாமல் அதிலே குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள்.

தீமைகள்

எவ்வளவுதான் நன்மைகள் இருந்தாலும் ஒரு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த காயை  நாம் பச்சையாக எடுத்து வந்தால் இதயத் துடிப்பை அதிகரிக்கும். மேலும் வயிற்றுப் போக்கு, பக்கவாதம் ஏற்படுத்தும். ஒரு சில நேரங்களில் கோமா நிலைமையை கூட ஏற்படுத்தும். ஆகவே இந்த காய்களை சமைத்து முறையாக சாப்பிடுவதே நம் உடல் நலத்திற்கு சிறந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow