தடையை மீறி சென்னையில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்ற ஜே.பி நட்டா

Feb 11, 2024 - 13:51
 0  1
தடையை மீறி சென்னையில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்ற ஜே.பி நட்டா

சென்னையில் நடைபெறும் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பங்கேற்கிறார். யாத்திரை வாகனத்தில் அவருடன் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோரும் பயணித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ”என் மண் என் மக்கள்” என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பித்த இந்த யாத்திரை நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் சென்னை மிண்ட் பகுதியில் நடைபெற்ற யாத்திரையில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றார். முன்னதாக சென்னை மிண்ட் பகுதியில் உள்ள ராமர் கோவிலில் நட்டா சுவாமி தரிசனம் செய்தார், அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து யாத்திரை வாகனத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோருடன் அவர் பங்கேற்றார்.

கட்சி வாய்ப்பு கொடுத்தால் எந்த தொகுதியிலும் நிற்பேன்: காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பேட்டி சென்னையில் பாஜக யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும் சென்னை தங்கசாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்துள்ளனர், ஆனால் தடையை மீறி நட்டா யாத்திரையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் நட்டாவுடன் அண்ணாமலை, எல். முருகன், வானதி சீனிவாசன், எச். ராஜா உள்ளிட்ட பாஜக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow