தமிழகத்தின் அமைதியைக் கெடுக்க சதிவலை பின்னப்படுகிறதா? - பீட்டர் அல்போன்ஸ்

Oct 28, 2023 - 05:19
 0  0
தமிழகத்தின் அமைதியைக் கெடுக்க சதிவலை பின்னப்படுகிறதா? - பீட்டர் அல்போன்ஸ்

சென்னை அம்பத்தூர் அருகே பட்டரவாக்கத்தில் வட மாநில தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவாகரத்தில் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலை காவல்துறையினர் தடுக்க முயன்றனர்.

அப்போது மோதலில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆவடி காவல் எல்லை, அம்பத்தூர் தொழிர்பேட்டை யில் வட மாநில தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் தெருவில். வழக்கு விசாரணைக்காக சென்ற காவலர்களை கம்பு, கட்டை, கல் போன்றவற்றால் வட மாநில தொழிலாளர்கள் தாக்கியுள்ளனர். 

 இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 28 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், சென்னை அம்பத்தூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் செய்த கலவரம் தமிழகத்தின் அமைதிச் சூழல்பற்றி முக்கிய கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. மிக்க் கடுமையாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் இதைப்போன்ற வன்முறை வெறியாட்டங்களை தடுத்து நிறுத்தும்! தமிழகத்தின் அமைதியைக் கெடுக்க சதிவலை பின்னப்படுகிறதா?' என கேள்வி  எழுப்பியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow