சென்னை அம்பத்தூர் அருகே பட்டரவாக்கத்தில் வட மாநில தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவாகரத்தில் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலை காவல்துறையினர் தடுக்க முயன்றனர். அப்போது மோதலில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆவடி காவல் எல்லை, அம்பத்தூர் தொழிர்பேட்டை யில் வட மாநில தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் தெருவில். வழக்கு விசாரணைக்காக சென்ற காவலர்களை கம்பு, கட்டை, கல் போன்றவற்றால் வட மாநில தொழிலாளர்கள் […]
தமிழ்நாட்டை வன்முறை களமாக மாற்றி, வெறுப்பு அரசியலை புகுத்த தமிழக ஆளுநரும், அண்ணாமலையும் முயற்சிக்கிறார்கள். – தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ். இன்று திருநெல்வேலியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கு 7.11 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மையின மக்களை சந்தித்து, அவர்கள் சந்திக்கும் பிரதான பிரச்னைகளை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்து […]
வினாத்தாள் சர்ச்சை தொடர்பாக துறை நடவடிக்கை எடுப்பதோடு தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தல். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பருவ தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டங்களை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில் தவறிழைத்தோர் மீது துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் […]
சாதி, மத மோதல்களை தவிர்க்க தமிழகத்தில் சமூக அமைதி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என முதல்வரிடம் அமைச்சர் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சாதி, மத மோதல்களை உருவாக்கி அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேட முயல்வோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசு சமூக அமைதி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், […]
தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. எஸ். பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் நல ஆணையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருத்தியமைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.பீட்டார் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கடந்த 1989ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 13ஆம் […]