#INDvsNZ : மிட்செல் அடித்த மிரட்டல் சதம்! இந்தியாவுக்கு நியூசிலாந்து வைத்த அதிரடி டார்கெட்?

Oct 22, 2023 - 12:34
 0  1
#INDvsNZ : மிட்செல் அடித்த மிரட்டல் சதம்! இந்தியாவுக்கு நியூசிலாந்து வைத்த அதிரடி டார்கெட்?

உலகக்கோப்பை 2023 : இன்று நடைபெற்று வரும் 21-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும்  9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் நியூசிலாந்து அணி 5 முறையும்,  இந்தியா 3 முறையும் வென்றுள்ளது. 1 லீக்போட்டி மழையால் கைவிடப்பட்டது.

அதே சமயம் இதுவரை 20 ஆண்டுகளாக உலக கோப்பை தொடர்களில் நியூசிலாந்து  அணியை இந்திய அணி தோற்கடித்தது இல்லை. கடைசியாக 2003 உலக கோப்பை தொடரில் தான்  நியூசிலாந்தை இந்தியா வென்றிருந்தது.  அதன் பிறகு நடந்த எந்த ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி நியூசிலாந்து  அணியை வெல்லவே இல்லை.

இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்று வரலாற்றை மாற்றி அமைக்கவேண்டும் என்ற நோக்கில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. தர்மஷாலா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெவோன் கான்வே டக் அவுட் ஆகி வெளியேறினார்.

அதன்பிறகு வில் யங் 17 ரன்கள், ரச்சின் ரவீந்திரன் 75 ரன்கள், டாம் லாதம் 5 ரன்கள், கிளென் பிலிப்ஸ் 23 ரன்கள், மார்க் சாப்மேன் 6 ரன்கள், மிட்செல் சான்ட்னர்1 , மாட் ஹென்றி0, எடுத்து  தங்களுடைய விக்கெட்டுகளை இழந்தனர். கடைசி வரை நம்பர் 4லில் களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி கடைசி வரை களத்தில் நின்று கொண்டு 130 ரன்கள் அடித்தார்.

பின் 49 ஓவரில் டேரில் மிட்செல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இருப்பினும்  அவருடைய இந்த மிரட்டலான சதம் காரணமாக நியூசிலாந்து இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்துள்ளார்கள். அடுத்ததாக 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.

மேலும், இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் முகமது ஷமி 5 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow