அவைத்தலைவர் துரைசாமி கடிதத்தை புறக்கணியுங்கள் - துரை வைகோ பதில்!

Apr 29, 2023 - 05:38
 0  2

திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்குமாறும் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ வேண்டுகோள்.

மதிமுக சட்டமன்ற அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதிருந்தார். அதில், மதிமுக கட்சியை திமுகவுடன் இணைத்து விடுங்கள். மதிமுக பொதுச்செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்ட பின்னர் கட்சி விதிகள் பல்வேறு விதமாக மாற்றப்பட்டுள்ளன. மதிமுக கட்சிக்கு முன்னர் இருந்த பெயர் தற்போது மாறிவிட்டது. மக்கள் மத்தியில் சமீப காலமாக அவப்பெயர் உண்டாகி வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் பேச்சை கேட்டு கட்சியில் இணைந்த தொண்டர்கள் நலனுக்காக மதிமுகவை தாய் கழகத்தோடு (திமுக) இணைத்து விடுங்கள் என்று தெரிவித்து பல்வேறு விமர்சனங்ளை முன்வைத்திருந்தார். இந்த நிலையில், திருப்பூர் துரைசாமி கடிதத்துக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,  ஜனநாயக உரிமைப்படி அவைத் தலைவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து கட்சி பொதுக்குழுதான் முடிவு செய்யும்.

சிலரது தூண்டுதலின் பேரில் அவைத் தலைவர் கடிதம் எழுதி உள்ளார். கட்சியில் குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாக மதிமுக அவைத்தலைவர் எழுதிய கடிதத்துக்கு தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பதிலளித்துள்ளார். மேலும், கட்சியில் மூத்தவர்களுக்கு மரியாதை அளிக்கப்படுவதாகவும், துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow