10,000 வேலைவாய்ப்புகள்.! FY25இல் இலக்கை நிர்ணயித்த HCL Tech.!

Apr 27, 2024 - 12:20
 0  4
10,000 வேலைவாய்ப்புகள்.! FY25இல் இலக்கை நிர்ணயித்த HCL Tech.!
#image_title

HCL Tech : நடப்பு நிதியாண்டில் HCL Tech நிறுவனம் 10 ஆயிரம் புதியவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

இந்திய தொழில்நுட்ப உலகில் பிரபலமான HCL Tech ஐடி நிறுவனத்தில் நடப்பு நிதியாண்டுக்கான FY25 (Financial Year 2025) ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கடந்த நிதியாண்டில் நிர்ணயிக்கப்ட்ட வேலைவாய்ப்பு இலக்கு, அதனை செயல்படுத்திய விதம், நடப்பு நிதியாண்டு வேலைவாய்ப்புக்கான இலக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டன.

இதுகுறித்து , HCL Techஇன் மக்கள் தொடர்பாளர் ராமச்சந்திரன் சுந்தராஜன் கூறுகையில், கடந்த FY24 (2024) நிதியாண்டில் 15 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்தோம். கடந்த நிதியாண்டில் இறுதி காலாண்டில் மட்டும் 3,096 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு இறுதியில் கடந்த நிதியாண்டில் 12,141 புதியவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன. மொத்தமாக கடந்த நிதியாண்டு இறுதியில் 2,27,481 பேர் HCL Techஇல் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் செயல்பாடு, ஒப்பந்த ஊழியர்களின் வேலைவாய்ப்புகள் ஆகியவை கருத்தில் கொண்டு FY25இல் 10,000 புதிய நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளளோம் என்று HCL Tech நிர்வாகி ராமச்சந்திரன் சுந்தராஜன் கூறினார்.

இந்த 10 ஆயிரம் வேலைவாய்ப்பு இலக்கை , ஒவ்வொரு காலாண்டிற்கும் தேவையான அளவுக்கு ஊழியர்களை பணியமர்த்துவோம் என்றும், ஒப்பந்த ஊழியர்களின் வேலைவாய்ப்பு என்பது, உள்நாட்டின் தேவைகளை பொறுத்தே அமையும் என்றும், உள்நாட்டு தேவை இருப்பின் ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்துவோம் என்றும், அதன் பிறகு ஒப்பந்த ஊழியர்களின் பணித்திறன் பொறுத்து அவர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றப்படுவர் என்றும் கூறியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow