வெற்றியின் முதல் படி: பூமியிலிருந்து நிலவு வரை சந்திரயான்-3 கடந்து வந்த பாதை!

Aug 23, 2023 - 07:17
 0  2
வெற்றியின் முதல் படி: பூமியிலிருந்து நிலவு வரை சந்திரயான்-3 கடந்து வந்த பாதை!

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்–3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

பூமியிலிருந்து நிலவுக்கு உயர்த்தும் நிகழ்வு:

முதற்கட்ட கட்ட நிகழ்வு

ஜூலை 15ம் தேதி முதற்கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earthbound firing-1) சுழற்சி முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அப்போது, விண்கலம் 41762 கிமீ x 173 கிமீ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இரண்டாம் கட்ட நிகழ்வு

ஜூலை 17ம் தேதி இரண்டாம் கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earth-bound apogee firing) சுழற்சி முறை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அப்போது, விண்கலம் 41603 கிமீ x 226 கிமீ சுற்றுப்பாதையில் கொண்டுவரப்பட்டது.

மூன்றாம் கட்ட நிகழ்வு

ஜூலை 18ம் தேதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (பூமிக்கு செல்லும் பெரிஜி துப்பாக்கி சூடு) சுழற்சி முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. விண்கலம் 51400 கிமீ x 228 கிமீ சுற்றுப்பாதையை அடைந்தது.

நான்காம் கட்ட நிகழ்வு

ஜூலை 20ம் தேதி நான்காம் கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earth-bound perigee firing) சுழ்ற்சி வெற்றிகரமாக முடிந்தது. அப்போது, விண்கலம் 71351 கிமீ x 233 கிமீ சுற்றுப்பாதையில் நிறுவப்பட்டது.

ஐந்தாம் கட்ட நிகழ்வு

இதனையடுத்து ஜூலை 25ம் தேதி ஐந்தாம் கட்ட மற்றும் இறுதி கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earth-bound perigee firing) சுழற்சி முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அப்போது, விண்கலம் 127603 கிமீ x 236 கிமீ சுற்றுப்பாதையை அடைந்தது. இதனை தொடர்ந்து, சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது.

நிலவை நோக்கி பயணம்:

ஆகஸ்ட் 1ம் தேதி டிரான்ஸ் லூனார் இன்செர்ஷன் (டிஎல்ஐ) சுழற்சி மூலம் சந்திரயான்-3 பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து புறப்பட்டு நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது. அன்றைய தினம், பூமியிலிருந்து நிலவுக்கு 288 கிமீ x 369328 கிமீ ஆக இருந்தது. ஆகஸ்ட் 4ம் தேதி விண்கலம் நிலவின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்தது.

[caption id="attachment_672254" align="aligncenter" width="2560"]Chandrayaan-3 Chandrayaan-3 [Image source : @chandrayaan_3][/caption]

பின்னர், ஆகஸ்ட் 5ம் தேதி லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) அதாவது, சந்திரயான்-3 விண்கலமானது பெரிலூனில் ஒரு ரெட்ரோ எரிப்பு மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.  இதன் பிறகு, சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை குறைப்பு நிகழ்வு நடைபெற்றது.

சுற்றுப்பாதை குறைப்பு:

முதற்கட்ட குறைப்பு

அதன்படி, கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. என்ஜின்களின் சுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது.

இரண்டாம் கட்ட குறைப்பு

ஆகஸ்ட் 9 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தியது. அதன், என்ஜின்களின் சுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 174 கிமீ x 1437 கிமீ. கொண்டு வரப்பட்டது.

மூன்றாம் கட்ட குறைப்பு

அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு 150 கிமீ x 177 கிமீ சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

இறுதிகட்ட குறைப்பு

ஆகஸ்ட் 16 ஆம் தேதி, சந்திரயான் -3ஐ 153 கிமீ x 163 கிமீ என்ற சுற்றுவட்டப்பாதையில் கொண்டு செல்லப்பட்டது. இத்துடன், சந்திரனைக் சுற்றிவரும் சுற்றுவட்ட பாதைகள் நிறைவடைகின்றன. இதுவே உந்துவிசைக் கலனின் உதவியுடன் ‘விக்ரம்’ லேண்டர் மேற்கொண்ட கடைசி கட்ட சுற்றுவட்ட பாதையாகும். தற்போதைய நிகழ்வு:

உந்துவிசைக் கலனில் இருந்து, தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவை சுற்றிவந்த போது,லேண்டரின் சுற்றுப்பாதை முதல் மற்றும் டீபூஸ்டிங் முறை மூலம் 25 கி.மீ. x 134 கி.மீ.க்கு வெற்றிகரமாக குறைக்கப்பட்டு தற்போது, விக்ரம் லேண்டர் 25 கிமீ x 134 கிமீ சுற்றுப்பாதையில், நிலவை சுற்றி வருகிறது. லேண்டரானது இன்று மாலை 18:04 மணி (6.04) அளவில் நிலவில் தரையிறங்க உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow