பைக்கை வச்சிக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டாரு! 'அமராவதி' முடிஞ்சதும் 2 முறை விபத்தில் சிக்கிய அஜித்!

Oct 16, 2023 - 06:39
 0  0
பைக்கை வச்சிக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டாரு! 'அமராவதி' முடிஞ்சதும் 2 முறை விபத்தில் சிக்கிய அஜித்!

நடிகர் அஜித்குமார் சிறிய வயதில் இருந்தே பைக் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். சினிமாவிற்குள் நடிக்க வருவதற்கு முன்பே இவர் பைக் ஒர்க்ஷாப்பில் வேலை செய்துகொண்டிருந்தார். அந்த சமயத்திலே பைக் எடுத்து வீலிங் செய்துகொண்டு இருப்பாராம். பிறகு சினிமாவிற்குள் நடிக்க வந்த போதும் அஜித் பைக் மீது கொண்ட ஆர்வத்தை விடாமல் புது புது பைக்குகளை வாங்குவது ரேஸ்களில் கலந்தும் கொண்டார்.

பிறகு, சமீப நாட்களாகவே அஜித் தனது பைக்கை எடுத்துக்கொண்டு ஒவ்வோரு நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார். இந்த நிலையில், தனக்கு எந்த காயம் ஏற்பட்டாலும் அதனை கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல் அந்த சமயத்தில் இருந்தே அஜித் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் மீண்டும் பைக்குகளை ஓட்டி வீலிங் செய்து வருகிறார். Ajith Kumar: ஏவிஎம் அருங்காட்சியகத்தில் அஜித் ஓட்டிய பல்சர் பைக்!

அதற்கு உதாரணமாக கூட எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்தின் ஒரு காட்சியில் அஜித் வீலிங் செய்வது போல வரும். அந்த காட்சி எடுக்கும்போது எதிர்பாராத விதமாக அஜித் கீழே விழுந்துவிடுவார். பிறகு எழுந்துவிட்டு மீண்டும் அந்த வீலிங் காட்சியில் அருமையாக நடித்து கொடுத்திருந்தார். அந்த வீடியோவும் மிகவும் வைரலானது.

இந்த நிலையில், இதைப்போல அமராவதி படத்தில் நடித்து முடித்ததும் அஜித்திற்கு இரண்டு முறை விபத்து நடந்ததாம். அப்படி விபத்து நடந்தும் சரியான பிறகு மீண்டும் பைக்கை வைத்துக்கொண்டு சும்மாவே இருக்கமாட்டாராம் பைக்கை வைத்துக்கொண்டு எதாவது செய்துகொண்டே இருப்பார் எனவும்  தயாரிப்பாளர் சோழ பொன்னுரங்கம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய சோழ பொன்னுரங்கம் " அமராவதி படத்தில் நடித்து முடித்துக்கொடுத்த பிறகு அஜித்திற்கு இரண்டு முறை விபத்து ஏற்பட்டது. இப்படி விபத்து நடந்தும் அவர் பைக்கை வைத்துக்கொண்டு சும்மாவே இருக்கமாட்டார். ஏனென்றால், பைக் மீது அவருக்கு அவ்வளவு விருப்பம் உள்ளது. அந்த சமயம் எல்லாம் எங்கு வேண்டுமானாலும் பைக்கில் தான் வருவார்.

குறிப்பாக படத்தின் படப்பிடிப்புக்கு கூட பைக்கில் தான் வந்துவிட்டு வீட்டிற்கு திரும்பி செல்வார். நானே அவரிடம் பலமுறை நடிகர் ஆன பிறகு பைக்கில் வெளியே செல்வதை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் என கேட்டிருக்கிறேன். 22 வயதில் அவரை எப்படி பார்த்தனோ அதே மரியாதையுடன் தான் இப்போதும் இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow