லெமன் ஜூஸ் குடிச்சா சளி பிடிக்குதா.? இதோ அதற்கான தீர்வு..!

Mar 26, 2024 - 12:10
 0  0
லெமன் ஜூஸ் குடிச்சா சளி பிடிக்குதா.? இதோ அதற்கான தீர்வு..!
#image_title

Lemon juice-எலுமிச்சை சாறு குடிப்பதால் ஏற்படும் சளி தொல்லையை தவிர்ப்பது எப்படி என இப்பதிவில் காணலாம் .

சளி பிடிக்காமல் இருக்க செய்ய வேண்டியது :

சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு எலுமிச்சை சாறு அருந்தும் போது சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது .அதற்காக எலுமிச்சை சாறு குடிப்பதை முற்றிலும் தவிர்த்தால் அதன் ஏராளமான நன்மைகள்   கிடைக்காமல் போய்விடும் .

சுடு தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து அந்த தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் சளி பிடிக்காது , ஜலதோஷம் பிடிக்காது.

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

  • எலுமிச்சையில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. நமக்கு சளி பிடித்தால் மருத்துவர்களால் பரிந்துரைக்கபடும் மருந்து சிட்ரஸின் . இந்த மருந்தில்  உள்ள சக்தி எலுமிச்சையில்  உள்ளது.
  • அலர்ஜி,அடிக்கடி உடல் நல குறைவு ஏற்படுபவர்கள்   எலுமிச்சை சாறு தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக்கப்படும் , அலர்ஜி குறைக்கப்படும்.
  • கிட்னியில் உள்ள ஆக்சலேட் கற்களின் அளவை  கரைக்கும் தன்மையை எலுமிச்சை சாறு கொண்டுள்ளது.
  • வைரஸ் தொற்று, பூஞ்சை தொற்று போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை சாறு குடித்து வரலாம். நாம் முன்பிருந்தே எலுமிச்சை சாறு அடிக்கடி குடித்து வந்தால் இதுபோல் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
  • உடலில் யூரிக் ஆசிட் அதிகமானால் கால் வீக்கம் ஏற்படும், எலுமிச்சைக்கு இந்த யூரிக் ஆசிட் அளவை  குறைக்கும் தன்மை உள்ளது.
  • எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட் நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள இரும்புச் சத்தை உறிஞ்சி  உடலுக்கு கொடுக்கும் தன்மையை கொண்டுள்ளது  .

எலுமிச்சை சாறு குடிக்கும் முறைகள்:

எலுமிச்சை சாறை வெறும் சாராக எடுத்துக்கொள்ளக் கூடாது, ஏனென்றால் இதில் உள்ள அமிலத்தன்மை பற்களை அரிக்கும் தன்மை கொண்டது.

ஒரு மடங்கு எலுமிச்சை சாறுக்கு ஐந்து மடங்கு தண்ணீர் சேர்த்து அருந்த வேண்டும். ஸ்ட்ரா  வைத்து குடிப்பது பற்களில்  பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கலாம்.

சூடான தண்ணீரில் எலுமிச்சை சாறை கலப்பதால் அதில் உள்ள வைட்டமின் சி சத்து அளிக்கப்படுகிறது ,எனவே அவ்வாறு செய்வதை தவிர்க்கவும் .

தவிர்க்க வேண்டியவர்கள் :

அல்கலோசிஸ் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் அதாவது சுவாசக் கோளாறு மூச்சை இழுத்து இழுத்து விடுதல் போன்ற தொந்தரவு இருப்பவர்கள், அதிக வாந்தி இருப்பவர்கள்  எலுமிச்சை சாறு அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது. மேலும் அல்சர் புண் உள்ளவர்கள் எலுமிச்சை சாறை  தவிர்க்கவும்.

எனவே எலுமிச்சை சாறில்  அதிக அளவு அமிலத்தன்மை உள்ளதால் அதை முறையாக பயன்படுத்தி அதன் பலன்களை பெறலாம் .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow