இந்தியாவில் கொரோனா பாதிப்பு..! 20 பேர் பலி..!

May 18, 2023 - 06:24
 0  1

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 906 பேருக்கு கொரோனா தோற்று உறுதி.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. அந்த வகையில், தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று 1,021 ஆக அதிகரித்திருந்த கொரோனா தொற்று இன்று 906 ஆக குறைந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11,393 லிருந்து 10,179 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், பலி எண்ணிக்கை 5,31,794 லிருந்து 5,31,814 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, ஒரே நாளில் 2,100பேர் குணமடைந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,44,42,065 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் இதுவரை 220,66,94,822 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 870 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் பாதிப்பால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow