ராகுல் காந்தியின் அமெரிக்க பயணத்தில் மாற்றம்!

May 19, 2023 - 06:01
 0  1

காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல் காந்தி 10 நாள் பயணமாக மே 28-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, ராகுல் காந்தி வரும் 31-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் என்றும் அங்கு ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கலிபோர்னியா, வாஷிங்டன் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் ராகுல் காந்தி ஜூன் 4-ம் தேதி நியூயார்க்கில் உள்ள மெடிசன் சதுக்கத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து உரையாடுகிறார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் அமெரிக்க பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல் காந்தி 10 நாள் பயணமாக மே 28-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். ஏற்கனவே, மே 31-ஆம் தேதி ராகுல் காந்தி அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே பயணம் மேற்கொள்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow