இது தான் சரியான நேரம்...அதிரடியாக தங்கம் விலை ரூ.1000 குறைந்தது!

Dec 5, 2023 - 07:22
 0  2
இது தான் சரியான நேரம்...அதிரடியாக தங்கம் விலை ரூ.1000 குறைந்தது!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. கடந்த வார நாட்களில் தங்கம் விலை வரலாறு காணாத ஏற்றம் கண்டது.

இந்த வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.480 அதிகரித்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு தங்கம் வாங்குவதற்கு இது நல்ல நேரம்,  இன்று நகை வாங்கினால், ரூ.1000 மிச்சப்படுத்தலாம்.

சென்னையில் (05.12.2023)  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.46800க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.5850க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.2.10 குறைந்து ரூ.81.40க்கும், கிலோ வெள்ளி ரூ.2,100 குறைந்து ரூ.81400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி ஜாமின் கோரி மனு தாக்கல்..!

சென்னையில் நேற்று (04.12.2023) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,975க்கும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,800க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலையில் எந்த வித மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.83.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.83,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow