லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி ஜாமின் கோரி மனு தாக்கல்..!

லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் கோரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அங்கித் திவாரி தாக்கல் செய்யப்பட்ட அவரின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை  கையும், களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.  மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி, முதலில் ரூ.20 லட்சம் பெற்ற நிலையில், மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார்.

பணத்துடன் காரில் தப்ப முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  அங்கித் திவாரியை  15 மணி நேர விசாரணைக்கு பின்  திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் கடந்த 1-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

 

author avatar
murugan