ரெய்டு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்..!

ரேஷன் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக்  கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஷாஜஹான் ஷேக்கின் இல்லத்தில் சோதனை நடந்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி இன்று சோதனை நடந்த ஷாஜஹான் ஷேக் இல்லத்தை  நெருங்கியபோது அமலாக்கத்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படைக் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுதமேந்திய துணை ராணுவப் படையினரை சுற்றி வளைத்தனர்.  அதிகாரிகளை ஷேக்கின் ஆதரவாளர்கள் தாக்கியதால் சோதனை … Read more

லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி ஜாமின் கோரி மனு தாக்கல்..!

லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் கோரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அங்கித் திவாரி தாக்கல் செய்யப்பட்ட அவரின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை  கையும், களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.  மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் … Read more

பாலிவுட் நடிகையின் சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை!

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ.7.12 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மோசடி செய்த பணத்தில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலினுக்கு பரிசு பொருட்கள் கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து, அமலாக்கத்துறை நடவடிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அண்மையில் வெளிநாடு செல்லவிருந்த நடிகை ஜாக்குலின் தடுத்து நிறுத்தப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தியிருந்தனர். அப்போது, சுகேஷ் சந்திரசேகரை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்று கூறியுள்ளார். தனியார் … Read more

கல்கி விஜயகுமார் மற்றும் அவரின் மகன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..!

கடந்த 16-ம் தேதி வரி ஏய்ப்பு  குற்றச்சாட்டின் பேரில் ஆந்திரா உட்பட இந்தியாவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த 40-க்கும் மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 44 கோடி ரூபாய் பணமும் , 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி மற்றும் 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 85 ரூபாய் கோடி  … Read more