பிக் பாஸ் 2 சீசனில் வெற்றியாளர் இவரா..? ரூபாய் 50,00,000_யை தட்டிச் சென்றார்..!!

பிக் பாஸ்2 நிகழ்ச்சியின் இறுதி போட்டி வெற்றியாளராக ரித்விக்கா அறிவிக்கப்பட்டு ரூபாய் 50,00,000 பெற்று சென்றார். கடந்த சில மாதங்களாக  வீடுகளில் அனைவராலும் பேசப்படும் ஓன்று விஜய் டிவி யில் தொடங்கிய பிக் பாஸ்  நிகழ்ச்சி.இதன்  முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாவது சீசன் கடந்த  ஜுன் 17ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடி வந்தனர். கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பிக் பாஸ் 2_வின்  இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.இந்த இறுதி … Read more

பிக் பாஸ் 2_ இறுதி போட்டியில் இவரா வெளியேறினார்..!!

பிக் பாஸ்2 நிகழ்ச்சியின் இறுதி போட்டியான இன்று வெற்றியாளர் யார் என்பதால் நிகழ்ச்சி மிகவும் எதிர்பார்ப்புடன் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இறுதி போட்டி வரை வந்த விஜயலட்சுமி பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதி போட்டியில் தற்போது வெளியேறினார்.பிக் பாஸ்1 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரோவ் விஜயலட்சுமியை வெளியே அழைத்து வந்தார். தொடர்ந்து ஐஸ்வர்யா ,ரித்விகா தொடர்ந்து உள்ளே உள்ளனர்.இருவரில் யார் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. DINASUVADU

நடிகை காஜல் அகர்வால் அழகு , நடிகை தமன்னா ஜோக்கர் போல் இருக்கிறார் ரசிகர்கள் கருத்து..!!

நடிகை கங்கனா ரனாவத் இந்தியில் நடித்த படம் ‘குயின்’. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ரீமேக் ஆகிவருகிறது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பருல் யாதவ் நடிக்கின்றனர். ஒரே கதாபாத்திரத்தை 4 ஹீரோயின்களும் ஏற்றிருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் 4 நடிகைகளின் பர்ஸ்ட் லுக் தோற்றங்கள் வெளியிடப்பட்டன. அதில் காஜலுக்கு பாராட்டும் தமன்னாவுக்கு டோஸும் கிடைத்திருக்கிறது. இதுபற்றி ரசிகர்கள் கூறும்போது,’4 ஹீரோயின்களின் தோற்றமும் வெவ்வேறுவிதமாக … Read more

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு புதிய நண்பராக விஷால் கிடைத்துள்ளாராம்..!!

விஷால், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ‘சண்டகோழி 2’. லிங்குசாமி இயக்குகிறார். யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இதில் நடித்ததுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, ’இப்படம் மூலம் எனக்கு நல்ல நண்பராக விஷால் கிடைத்திருக்கிறார். சாவித்ரி வாழ்க்கை சரித்திர படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் இப்படத்திலும் நான் நடித்து வந்தேன். அந்த படத்தில் சோகம், ஆக்ரோஷம் என பலவிதமான காட்சிகளில் நடித்து டென்ஷனாக இருப்பேன். இதற்கிடையில் சண்டகோழி 2ம் பாகம் படப்பிடிப்புக்கு வரும்போது ரொம்பவும் ஜாலியான சூழல் நிலவும். … Read more

பாடகியாக மாறும் தமிழ் நடிகை..!!

நடிகை ஸ்ருதிஹாசன் இசைக்குழு நடத்தி வருகிறார். நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் இசையில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் மேடையில் பாப் இசை பாடல் பாடி பரபரப்பை ஏற்படுத்தினார். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் நடத்தி பாப் பாடகியாக புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் தற்போது தீவிரமாக உள்ளார். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா. திரைப்படங்களில் நடிப்பதுடன் இசை அமைத்து பாடல்கள் பாடுவதில் ஆர்வம் … Read more

பிக்பாஸ் 2 பைனாலுக்கு ஓவியா வருகை…..!!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் ஃபைனல் தற்போது நடைபெற்று வருகிறது. இறுதிச் சுற்றில் நடிகை ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரசிகர்கள் டைட்டிலை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முத்திரையாக மாறிப் போன நடிகை ஓவியா இன்று நடைபெறும் பிக்பாஸ் ஃபைனலுக்கு மேடைக்கு வருகிறார்.நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக ஆரவ் ரித்விகாவை அழைத்துச் செல்வது போல் ப்ரமோ வீடியோ வெளியானதிலும் பெரிய சஸ்பென்ஸை வைத்திருக்கிறார் பிக்பாஸ். எது எப்படி இருந்தாலும் இன்று … Read more

பொங்கலுக்கு வரவில்லையா தலயின் விஸ்வாசம்?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் தல அஜித் இனண்டுவிதமான கெட்டப்பில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். D.இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் முதலில் தீபாவளிக்கு வருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஷூட்டிங் தாமதம் காரணமாக பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது வரை இப்படத்தின் ஒரே ஒரு போஸ்டர் மட்டுமே வெளியானது. இன்னும் வேறு எந்த அறிவிப்பும் படக்குழுவிலிருந்து வெளியாகததால் இப்படம் பொங்கலுக்கு … Read more

மீன்வளத்துறை மியூசிக் துறையாக மாறிய அதிசயம்…!என்ன ஒரு திறமை..???

இன்று சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், பி.சுசிலா உள்ளிட்டோரோடு இணைந்து எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி அசத்தினார். இன்று சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இன்னிசைக் கச்சேரி நடத்த வந்த லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்க சென்ற  அமைச்சர் ஜெயக்குமார் ஸ்ருதியோடு மேடையில் பாடினார். அவர் பாடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் பாடவேண்டும் என இசைக்குழுவினர் விருப்பம் தெரிவிக்க, அழகிய தமிழ் … Read more

“ஒரு விரல் புரட்சி’வைரல் புரட்சியாக மாறட்டும்”நடிகர் சித்தார்த்…!!

“ஒரு விரல் புரட்சி’வைரல் புரட்சியாக மாறட்டும் என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். நடிகர் விஜய்-இயக்குநர் முருகதாஸ், கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பாடல் குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், `ஒருவிரல் புரட்சி’ வைரல் புரட்சியாக மாறட்டும் என்று கூறியுள்ளார்.சிம்டாங்காரன் விமர்சனத்தை ஒருவிரல் புரட்சி முறியடித்துள்ளது என்றே கூறலாம். DINASUVADU

“கோலியை நெருங்கிய ரோகித்”பலே பலே இந்திய வீரர்கள் ஆதிக்கம்..!!

ரோஹித் சர்மா 2-வது இடத்துக்கு ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன்கள் பிரிவில்  2-வது இடத்துக்கு பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் பிரிவில், இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.தற்போது நிறைவடைந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேபோல ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்த ஷிகர் தவான் நான்கு இடங்கள் … Read more