மீன்வளத்துறை மியூசிக் துறையாக மாறிய அதிசயம்…!என்ன ஒரு திறமை..???

இன்று சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், பி.சுசிலா உள்ளிட்டோரோடு இணைந்து எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி அசத்தினார்.

இன்று சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இன்னிசைக் கச்சேரி நடத்த வந்த லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்க சென்ற  அமைச்சர் ஜெயக்குமார் ஸ்ருதியோடு மேடையில் பாடினார்.

அவர் பாடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் பாடவேண்டும் என இசைக்குழுவினர் விருப்பம் தெரிவிக்க, அழகிய தமிழ் மகள் இவள் என்று பாடிக் கைதட்டல்களை அள்ளினார் ஜெயக்குமார்.

DINASUVADU

Leave a Comment