பொங்கலுக்கு வரவில்லையா தலயின் விஸ்வாசம்?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் தல அஜித் இனண்டுவிதமான கெட்டப்பில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். D.இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படம் முதலில் தீபாவளிக்கு வருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஷூட்டிங் தாமதம் காரணமாக பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது வரை இப்படத்தின் ஒரே ஒரு போஸ்டர் மட்டுமே வெளியானது. இன்னும் வேறு எந்த அறிவிப்பும் படக்குழுவிலிருந்து வெளியாகததால் இப்படம் பொங்கலுக்கு வெளிவந்துவிடுமா என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

DINASUVADU

 

Leave a Comment